பொது செய்தி

தமிழ்நாடு

கன மழை அறிவிப்பு வாபஸ்

Added : ஆக 23, 2019
Advertisement

கன மழை, அறிவிப்பு, வாபஸ்

சென்னை: 'தமிழகத்தில், 27ம் தேதி வரை, கன மழைக்கு வாய்ப்பில்லை' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.சென்னை வானிலை மையம், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், ஆக., 26 வரை,சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இந்த அறிவிப்பு, நீக்கப்பட்டது.
இதையடுத்து, '27ம் தேதி வரை, கன மழைக்கு வாய்ப்பில்லை' என, தெரிவித்துள்ளது.பல மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். 35 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.மீனவர்கள் வங்கக் கடலின், மத்திய மேற்கு பகுதிக்கு செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X