சென்னை: ''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தி.மு.க.நடந்து கொள்வது வெட்கக்கேடு'' என மீன் வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:'ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் மூன்றாவது கட்சியாக உள்ள தி.மு.க. குரல் எழுப்புவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என பாகிஸ்தான் ரேடியோவில் ஒளிபரப்புகின்றனர். இதை விட வெட்கி தலைகுனியும் விஷயம் வேறு இருக்க இயலாது.'ஐ.என்.எக்ஸ். மீடியா 2ஜி ஸ்பெக்ட்ரம்' என்ற இரண்டு வழக்குகளால் இந்தியா முழுவதும் தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வே காரணம்.முன்னாள் அமைச்சர் சிதம்பரம் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை முன் ஆஜராகி இருக்கலாம். ஆஜராகாததால் சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதிக்கும் நிலை ஏற்பட்டது. சிதம்பரம் யாருக்கும் எதுவும் செய்யாதவர்; அதனால் தான் அவர் நிழல் கூட திரும்பி பார்க்கவில்லை.
தகுதி இல்லாதவர்
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என்னை 'ஜோக்கர்' எனக் கூறியுள்ளார். ஜோக்கர் இல்லை என்றால் சீட்டாட்டம் கிடையாது; அரசியல் ஆட்டமும் கிடையாது. துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியாது. தலைவர் பதவிக்கு அவர் தகுதி இல்லாதவர்.
பயங்கரவாதிகள் ஊடுருவல் தகவலால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழகப் போலீசார் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறனை பெற்றுள்ளனர். காவல் துறை உஷாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE