பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வில் 551 பேர் தான், 'பாஸ்' : தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை:ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில், 551 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, 0.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 99.67 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.ஆசிரியர் தகுதி தேர்வு என்ற, 'டெட்' தேர்வு, ஜூன், 8, 9ம் தேதிகளில், தமிழகத்தில் நடத்தப்பட்டது. இதில், இரண்டு தாள்களிலும் சேர்த்து, 5.42 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.முதல்
எழுதியவர்கள்  5.42 லட்சம் : 'பாஸ் 551

சென்னை:ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில், 551 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, 0.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 99.67 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு என்ற, 'டெட்' தேர்வு, ஜூன், 8, 9ம் தேதிகளில், தமிழகத்தில் நடத்தப்பட்டது. இதில், இரண்டு தாள்களிலும் சேர்த்து, 5.42 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.முதல் தாளை பொருத்தவரை, பிளஸ் 2வில் குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று, டிப்ளமா கல்வியியல் முடித்தவர் முதல், பி.எட்., முடித்தவர் வரை, தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.இவர்களுக்கு, 6 முதல், 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் வகையில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.


0.33 சதவீதம்


குழந்தைகள் மேம்பாடு, பயிற்றுவித்தலில், 30; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகியவற்றில், ஏதாவது ஒரு மொழி பாடத்தில், 30; ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் அறிவியலில், தலா, 30 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், 150 கேள்விகள் இடம் பெற்றிருந்தன.ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான, முதல் தாள் தேர்வை, 1.62 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதற்கான தேர்வு முடிவு, 20ம் தேதி வெளியானது. தேர்வில், 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றதாக, தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் என்ற அதிகாரப்பூர்வ தகவலை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.இதன்படி, 1.62 லட்சம் பேரில், 551 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், 410 பேர் பெண்கள். இதன்படி, 0.33 சதவீதம் பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 99.67 சதவீதம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
24-ஆக-201919:24:33 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan முட்டாள்களுக்கு எங்கள் வரிப்பணம் சம்பளமாகக் கொடுப்பது வயிறெரிகிறது. தொல்வியடைந்தவர்களை வீட்டுக்கு‌அனுப்புங்கள். இந்த முட்டாள்களிடம் கற்பவர்கள் எப்படி புத்திசாலியாக முடியும்.
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
24-ஆக-201918:07:24 IST Report Abuse
natarajan s இவர்களில் பெரும்பாலோர் பணம் கொடுத்துதான் வேலை வாங்கியிருப்பார்கள் அங்கு மெரிட் எல்லாம் இரண்டாம்பட்சம்தான் . அதென் வெளிப்பாடே இந்த தேர்வு முடிவுகள் . இதில் மனித நேயம் நிறுவனரின் பங்கு அதிகம் . அங்கு பயிற்சி பெறுபவர்கள் அதிகம் தேர்வு பெறுவார்கள் . இந்த தொடர்புகள்தான் ஒரு அகில இந்திய தேர்வு பயிற்சி நிறுவனர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டது.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
24-ஆக-201917:37:09 IST Report Abuse
jagan இட ஒதுக்கீடு கேஸுங்க ...அதுங்களுக்கு என்ன தெரியும்? பரீட்சை நடத்தும் இடத்திற்கு சரியாக வந்ததற்கே, மார்க் போட்டதால் தான் தேறும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X