அரசியல் செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., கிளைக்கால்வாய் பராமரிப்பு பணி

Added : ஆக 23, 2019
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆவலப்பம்பட்டி கிளைக்கால்வாயில், 20 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணி நடக்கிறது.

நெகமம் அருகே, ஆவலப்பம்பட்டி வழியாக, பி.ஏ.பி., பாசனத் திட்டத்தின் பிரதான கால்வாய் திருப்பூர் மாவட்டத்துக்கு செல்கிறது.இக்கால்வாயில் இருந்து, 16 கி.மீ., துாரத்துக்கு ஆவலப்பம்பட்டி கிளைக்கால்வாய் அமைக்கப்பட்டு, விளை நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது.கால்வாயின் இரு கரைகளும் புதர் மண்டி கிடந்தது. இதையடுத்து, குடிமராமத்து திட்டத்தின் கீழ், கால்வாயை ஆக்கிரமித்திருந்த களை செடி, கொடிகளை அகற்றி, சுத்தப்படுத்த, தமிழக அரசு, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக, ஆவலப்பம்பட்டி பகுதி பாசன சபை தலைவர் பாலசுப்ரமணி மேற்பார்வையில், துார்வாரும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பணிகளை கலெக்டர் ராஜாமணி திடீர் ஆய்வு மேற்கொண்டு, 960 மீட்டர் நீளத்துக்கு மண் கால்வாய் அமைக்கும் பணி துரிதப்படுத்த ஆலோசனை வழங்கினார். கலெக்டர் ஆய்வின் போது, பொள்ளாச்சி சப் - கலெக்டர் ரவிகுமார் மற்றும் பி.ஏ.பி., பாசன திட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X