அரசியல் செய்தி

தமிழ்நாடு

500 நாட்களுக்கு முன்னதாக பிரசாரம் ஆட்சியை பிடிக்க கமல் கட்சி திட்டம்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement
 ஆட்சியை பிடிக்க கமல் வியூகம்


சென்னை:தமிழக சட்டசபை தேர்தலுக்கு, 500 நாட்களுக்கு முன்பாகவே, தேர்தல் பிரசாரத்தை துவக்க, கமல் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சியின் விரிவாக்கம் மற்றும் கட்டமைப்பு விளக்கக் கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், துணை தலைவர், மகேந்திரன், பொதுச் செயலர்கள் அருணாச்சலம், மவுரியா, பஷீர்அகமது, ரங்கராஜன், கமீலா நாசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சென்னை, திருவள்ளுர் மாவட்ட கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், இதில் பங்கேற்றனர்.
அதில், துணை தலைவர், மகேந்திரன் பேசியதாவது:

கட்சியின் கட்டமைப்பை விளக்கவும், புதிய பொறுப்புகளுக்கு விண்ணப்பம் பெறவும், தமிழகத்தின் பல மாவட்டங்களில், கலந்தாலோசனை கூட்டம் நடந்து வருகிறது. எங்கள் கட்சியில், 'ஆப்பரேஷன் -- 500' என்ற திட்டத்தை வைத்திருப்பதாக கூறுகின்றனர்; அப்பெயரை, நாங்கள் வைக்கவில்லை.ஆனாலும், 2021 ஏப்ரல் அல்லது மே மாதம், தமிழக சட்டசபைக்கு, தேர்தல் நடக்கும். அதை திட்டமிட்டே, 500 நாட்களுக்கு முன்பாக, நவம்பர் முதல், தேர்தல் பிரசாரத்தை துவக்க உள்ளோம்.

அதற்காக, கட்சியை தயார்படுத்தவே, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் மற்றும் இரு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வந்தால் போட்டியிடுவது குறித்து, அப்போது யோசிக்கப்படும். எங்களின் நோக்கம், 2021 சட்டசபை தேர்தல் மட்டுமே. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
24-ஆக-201921:02:03 IST Report Abuse
S.BASKARAN இவனுடைய கோமாளித்தனத்துக்கு ஒரு எல்லையே இல்லை.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
24-ஆக-201920:29:39 IST Report Abuse
Vijay D Ratnam இந்திய சினிமாவின் ஐகான் கமல்ஹாசன். அந்த கெத்தோடு இருந்திருந்தால் கமல்ஹாசன் எப்போதும் கொண்டாடப்படும் நபராகவே இருந்திருப்பார். வறுமையின் நிறம் சிவப்பு, சலங்கை ஒலி, மூன்றாம்பிறை, சிப்பிக்குள்முத்து, நாயகன், அபூர்வ சகோதரர்கள், சத்யா, குணா, குருதிப்புனல், தேவர்மகன், ஹேராம், தெனாலி, வேட்டையாடு விளையாடு, அன்பேசிவம், ஆளவந்தான் போன்ற படங்களை கமல்ஹாசனை தவிர யாராலும் கொடுக்கமுடியாது, அப்படிப்பட்ட ஒரு நடிப்பை மற்ற நடிகர்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஆனால் அரசியலில் இறங்கி கேவலப்பட்டு நிற்கப்போகிறார். கடந்த தேர்தலில் பத்து சதவிகித வாக்குகளை பெற்றிருந்தால் தொடர்ந்து முயற்சி செய்யலாம். இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்று டிடிவி தினகரன், சீமான் ரேஞ்சுக்கு இறங்கிவிட்டார். இனியும் தொடர்ந்தால் பிறகு வேல்முருகன், தனியரசு ரேஞ்சுதான். சினிமா ஹீரோ பொலிட்டிகல் பபூன் ஆகிவிட்டார்.
Rate this:
Cancel
Aruna -  ( Posted via: Dinamalar Android App )
24-ஆக-201919:11:38 IST Report Abuse
Aruna பெரிய தனி வீட்டில் அனைவரும ஓன்றாக ஆடல்பாடலலுடன் இருக்க அப்பப்ப கலகலப்புடன் இருக்க, கைகலப்புடன் இருக்க முதல் உத்தரவிற்கு உத்திர வாதம் தரப் போகிறீர்களா! வியூகம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X