'மோடியை திட்டுவது தவறு': காங்கிரசாருக்கு திடீர் ஞானோதயம்

Added : ஆக 23, 2019
Advertisement

புதுடில்லி:'பிரதமர் நரேந்திர மோடியை கெட்டவராக உருவகப்படுத்துவது தவறு' என காங். மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறிய நிலையில், மற்றொரு மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வியும் அதை வழிமொழிந்துள்ளார்.கடந்த ஐந்து ஆண்டுகளாக பா.ஜ.வை குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.
சமாளிப்பது கடினம்
இந்நிலையில் இந்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மோடி மீண்டும் பிரதமரானார்.கடந்த சில வாரங்களாக காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை பாராட்டத் துவங்கிஉள்ளனர். பிரதமரின் சுதந்திர தின உரையை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பாராட்டினார். அவரைத் தொடர்ந்து பலரும் பாராட்டினர்.இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங். மூத்த தலைவருமான ஜெயராம் ரமேஷ் நேற்று முன்தினம் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை அங்கீகரிக்க வேண்டிய காலம் வந்துள்ளது.
கடந்த 2014 முதல் 2019 வரை அவர் மேற்கொண்ட பணிகளால் தான் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் 30 சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.அவர் மக்களுக்கு புரியும் மொழியில் பேசுகிறார். இத்தனை ஆண்டு களாக இருந்ததுபோல் இப்போதும் இதை நாம் புரிந்து கொள்ளாமல் இருந்தால் அவரை சமாளிப்பது மிகவும் கடினம்.தொடர்ந்து அனைத்து விஷயங்களிலும் மோடியை மோசமானவராக சித்தரிக்க வேண்டிய அவரசியம் இல்லை.
அதற்காக நான் அவரைப் பாராட்ட வேண்டும் என்று கூறவில்லை. அதே நேரத்தில் நிர்வாகத்தில் அவர் செய்துள்ள மாற்றங்களை நாம் அங்கீகரிக்க வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவருடைய திட்டங்கள்தான்.பல நல்ல திட்டங்களில் குறிப்பிடப்பட வேண்டியது ஏழை பெண்களின் பெயரில் இலவச சமையல் 'காஸ்' இணைப்பு வழங்கும் திட்டம்தான். நாம் இந்த திட்டத்தை கிண்டல் செய்து அரசியல் ரீதியில் எதிர்த்து வந்தோம். ஆனால் அந்த திட்டம் பெண்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல் சமீபத்தில் நடந்த தேர்தலில் விவசாயிகளின் பிரச்னை குறித்து நாம் தீவிரமாக பிரசாரம் செய்தோம். விவசாயிகளுக்கு பிரச்னை இருந்தது உண்மைதான்.ஆனால் அதற்கு மோடிதான் காரணம் என்று விவசாயிகள் நினைக்கவில்லை. மக்கள் அவரை ஏன் மதிக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மற்றொரு மூத்த தலைவரான அபிஷேக் மனு சிங்வியும் அதை வழிமொழிந்துள்ளார். சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறிஉள்ளதாவது:பிரச்னைஎப்போதும் பிரதமர் மோடியை மோசமானவராக சித்தரிப்பது தவறு. அவர் நாட்டின் பிரதமர். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு உதவி செய்து உள்ளோம்.
சில விஷயங்கள் நல்லதாக இருக்கும் சில விஷயங்கள் தவறாக இருக்கும் நம்முடைய கருத்துக்கு வேறுபட்டதாகவும் இருக்கும்.இதில் நாம் பிரச்னையைத்தான் பார்க்க வேண்டும் தனி நபரை அல்ல.ஏழை பெண்களின் பெயரில் சமையல் 'காஸ்' இணைப்பு வழங்கும் திட்டம் அவருடைய பல நல்ல திட்டங்களில் குறிப்பிட வேண்டிய ஒன்று.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X