காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையீடு தேவையில்லை: மேக்ரோன்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
காஷ்மீர் விவகாரம், பிரான்ஸ், அதிபர், மேக்ரோன், பிரதமர் மோடி

சான்டில்லி: ''காஷ்மீர் விவகாரத்தை, இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இருதரப்பு பேச்சு நடத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும் அதில், மூன்றாம் நாடுகள், வன்முறையை துாண்டி விடக் கூடாது,'' என, பிரான்ஸ் அதிபர், மேக்ரோன், 41, கூறினார்.
பிரான்ஸ்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதற்கட்டமாக, பிரான்ஸ் சென்றார். பிரான்ஸ் பிரதமர், எட்வர்டு சார்லஸ் பிலிப், அதிபர் மேக்ரோன் ஆகியோரை சந்தித்து, பல தரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார்.அதிபருடன், 90 நிமிடங்கள் நடந்த, தனியான சந்திப்பு மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்பில், இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து, இரு நாடுகளின் தலைவர்களும், அதிகாரிகளும் வலியுறுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையே, பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.சந்திப்புக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், அதிபர் மேக்ரோன் தெரிவித்தாவது:காஷ்மீர் மற்றும் பல விவகாரங்கள் குறித்து, பிரதமர் மோடி என்னிடம் விளக்கமாக பேசினார். சமீபத்தில், ஜம்மு - காஷ்மீரில், இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் விளக்கினார்.
அவரிடம் நான், 'இந்தியா - பாகிஸ்தான் பிரச்னைகளை, இரு நாடுகளும் பேச்சு மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதில், மூன்றாம் நாடுகள் தலையிட்டு, வன்முறையை துாண்டிவிடக் கூடாது' என, தெரிவித்து உள்ளேன். இப்போதுள்ள நிலைமை மேலும் தீவிரமாகாமல் பார்த்துக் கொள்வது, இரு நாடுகளின் பொறுப்பு என்பதையும் உணர்த்தியுள்ளேன்.இரு நாடுகளின் பொதுமக்கள் நலனுக்கு பாதகமான எந்த செயலும் நடைபெறாமல், பிரான்ஸ் கவனமாக பார்த்து வருகிறது. இன்னும் சில நாட்களில், பாகிஸ்தான் பிரதமருடன் பேசி, இரு தரப்பு பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ள வலியுறுத்துவேன். இவ்வாறு, மேக்ரோன் தெரிவித்தார்.தற்காலிகமே கூடாது: மோடி பேச்சுபாரீஸ் நகரில், இந்தியர்கள் மத்தியில், பிரதமர் மோடி பேசியதாவது:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மக்கள் எங்களுக்கு அபரிமிதமான ஆதரவை அளித்துள்ளனர். மீண்டும் அரசாட்சி செய்வதற்காக அல்ல; புதிய இந்தியாவை உருவாக்கு வதற்காக. மக்களின் வாழ்வை எளிதாக்குவது மற்றும் தொழில்களை எளிதாக நடத்துவதற்கான நடவடிக்கைகளில், எங்கள் அரசு கவனம் செலுத்துகிறது. எங்களைப் பொறுத்த மட்டில், இந்தியாவில் எதுவுமே, தற்காலிகம் இல்லை. 125 கோடி மக்கள் வாழும் பூமி. மகாத்மா காந்தி, புத்தர், ராமபிரான், கிருஷ்ண பகவான் அவதரித்த பூமி அது.

அங்கு இருந்த, தற்காலிகம் என்ற ஓர் அம்சத்தை நீக்க, 70 ஆண்டுகள் ஆகின.எங்களின் புதிய இந்தியாவில், முஸ்லிம் பெண்களுக்கு அநீதி தொடரக் கூடாது என்பதற்காகத் தான், முத்தலாக் முறைக்கு எதிராக, சட்டம் கொண்டு வந்தோம்.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.'தற்காலிகம்' என, பிரதமர் மோடி குறிப்பிட்டது, ஜம்மு - காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை தான்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
24-ஆக-201912:13:08 IST Report Abuse
Desabakthan மேக்ரோன் வழ வழ கொழ கொழ தான். ரொம்ப நடு நிலை வாதியாய் பேசுவதாக கொள்ளலாம். ஆனால் மனசுக்குள்ள நினைச்சிருப்பார். அதிரடியா துணிஞ்சு செஞ்சுட்டீங்க இங்க எங்களால் முடியலே அப்படினு. ஐரோப்பிய நாடுகள் தீவிர வாதிகளிடம் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டுள்ளது. மோடிஜியின் பேச்சு நெத்தியடி. பதிலடி. நீண்ட கால நட்பாக இருப்பினும் வியாபார நுட்பம் (ரபேல் கொள்முதல்) மூலம் பிரான்ஸ் கை வைத்து பாக் வாயை மோடி அடைத்து விட்டார். அதுபோல இன்னும் பல நாடுகள். யாராவது பாக்குக்கு ஆதரவை பேசினா (நம்ம சுடலை இல்லீங்க) காந்தி கட்டு நிறைய அனுப்பி வெச்சு வாயை மூட வெச்சுடலாம். இந்த கருப்பு பணமும் வந்துடுச்சுனா அப்புறம் உலகத்தையே வாங்கிடலாம். அதுக்கு நம்ம நீதிமன்றங்கள் ஒத்து வரணும்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
24-ஆக-201908:47:45 IST Report Abuse
blocked user "மூன்றாம் நாடுகள், வன்முறையை துாண்டி விடக் கூடாது" - அமெரிக்காவை சொல்லுகிறாரோ... சீனா பாக்கிகளை தூபம் போடுகிறது. சிம்லா ஒப்பந்தப்படி பாக்கிகள் ஒருபொழுதும் நடக்கவில்லை. ஆகவே அதைக்கட்டி அழுவதை இந்தியா விட்டுவிட்டு பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை திரும்பப்பிடிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X