அரசியல் செய்தி

தமிழ்நாடு

6 நீர் மின் நிலையங்களை புனரமைக்க முடிவு

Added : ஆக 24, 2019
Advertisement

ஆறு இடங்களில் உள்ள, நீர் மின் நிலையங்களில், அவற்றின் உற்பத்தித்திறனை அதிகரிப்பது உள்ளிட்ட, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழக மின் வாரியத்திற்கு, நீலகிரி மாவட்டம், குந்தா; கோவை, காடம்பாறை; ஈரோடு, நெல்லை என, நான்கு, நீர் மின் உற்பத்தி வட்டங்கள் உள்ளன. இவற்றில், 2,307 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன.அங்குள்ள அணைகளில், மழை காலங்களில், தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. 1 யூனிட் நீர் மின்சார செலவு, 50 காசுக்கு கீழ் உள்ளது. இந்த மின்சாரத்தால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது.மத்திய அரசு, 25 ஆண்டுகள் முடிந்த, நீர் மின் நிலையங்களை புதுப்பிக்குமாறு, மாநில மின் வாரியங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதனால், அந்த மின் நிலையங்களில், உற்பத்தித் திறனை அதிகரிப்பது உள்ளடக்கிய, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.அதன்படி, காடம்பாறை வட்டத்தில் உள்ள, சோலையார் மின் நிலையத்தில், தலா, 35 மெகா வாட் திறனில் இருந்த, இரு அலகுகளின் உற்பத்தித் திறனும், தற்போது, தலா, 42 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.தொடர்ந்து, நெல்லை வட்டத்தில், 60 மெகா வாட் திறனில் உள்ள, கோதையாறு மற்றும் 35 மெகா வாட் சுருளியார்;

குந்தா வட்டத்தில், 12 மெகா வாட் மோயார் மின் நிலையங்களில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.மேலும், காடம்பாறை வட்டத்தில், 30 மெகா வாட் சக்கார்பதி மற்றும், 60 மெகா வாட் ஆழியார்; ஈரோடு வட்டத்தில், 50 மெகா வாட் திறனில் உள்ள, மேட்டூர் சுரங்க நீர் மின் நிலையங்களிலும், அந்த பணிகள் நடக்க உள்ளன.புனரமைப்பு பணியின் முதல் பகுதியாக, மேற்கண்ட மின் நிலையங்களில், ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில், மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X