அரசியல் செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் பிளாஸ்டிக் மத்திய அரசு தடை

Added : ஆக 24, 2019
Share
Advertisement

திருப்பூர் : 'நாடு முழுவதும் உள்ள பள்ளி வளாகங்களிலும், வெளியிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்' என்று, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து மாநில கல்வித்துறை முதன்மைச்செயலர்கள் மற்றும் செயலர்களுக்கு, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின், பள்ளிக்கல்வித்துறை சார்பில், துணைச்செயலர் பி.கே.சிங், அனுப்பியுள்ள கடிதம்:நாட்டின், 73வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 'ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் இருந்து, நாடு விடுதலையாக வேண்டும்' என்று குறிப்பிட்டார்.ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கிறது.

நிலத்திற்குள் ஊடுருவுவதால், நீர் உறிஞ்சப்படுவதில்லை; சாக்கடைகளும் அடைபடுகின்றன. இதற்கு எதிராக, வரும், அக்., 2ம் தேதி நாடு தழுவிய பிரசார இயக்கம், துவங்குகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், வளாகங்களிலும், வெளியிலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்க்க, அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X