அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்தியாவை ஏமாற்றினால் தப்பவே முடியாது: பா.ஜ.,துணைத்தலைவர்

Added : ஆக 24, 2019
Advertisement

வடமதுரை : 'எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் இந்தியாவை ஏமாற்றினால் தப்ப முடியாது என்பதற்கு சிதம்பரம் கைது சான்று' என, பா.ஜ., மாநில துணைத் தலைவர் அரசகுமார் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் தொகுதி அளவில் பா.ஜ., தீவிர உறுப்பினர் சரிபார்ப்பதற்காக நேர்காணல் நடந்தது. இதில் மாநில துணைத் தலைவர் அரசக்குமார் பேசியதாவது: முன்னாள் நிதிஅமைச்சர் சிதம்பரத்தின் கைது என்பது, பலம் பொருந்திய பதவியில் இருப்போரும், இந்திய பொருளாதாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், ஏமாற்றினாலும், ஒற்றுமைக்கு தீங்கு விளைவித்தாலும் தண்டிக்கப்படுவர் என்பதற்கு சான்று. காங்கிரஸ் கட்சியினர் 50 ஆண்டுகளுக்கு மேலாக மதம், ஜாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி சுயநல அரசியலுக்காக காஷ்மீரை 370 சட்டப்பிரிவின் கீழ் வைத்திருந்தனர்.

அந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தாரை வார்ப்பு என்ற நிலை தகர்க்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வும், அதன் ஊடகங்களும் தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். தி.மு.க.,வின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X