அரசியல் செய்தி

தமிழ்நாடு

பஸ் செல்லாத பகுதியில் பயணிகள் நிழற்குடை திறப்பு

Added : ஆக 24, 2019
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் புதிதாக கட்டப்பட்ட பூங்கா, சுகாதார வளாக மையம், பள்ளி வகுப்பறையை அமைச்சர் சீனிவாசன் திறந்து வைத்தார்.

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் அம்ரூத் திட்டத்தில் ரூ.50 லட்சத்தில் பூங்கா, ரூ.15 லட்சத்தில் திறந்தவெளி கலையரங்கம், சிறுமலை செட் மற்றும் பெங்காலி மார்க்கெட்டில் சுகாதார வளாக மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.மேலும் பழநி ரோடு, சிலுவத்துார் ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை திறக்கப்பட்டது. இதில் சிலுவத்துார் ரோட்டில் கடந்த 4 ஆண்டுகளாக மேம்பால அமைக்கும் பணி துவங்கப்பட்டு பாதியிலேயே கிடப்பில் உள்ளது. இந்த வழியே பஸ்கள் வந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

நேற்று அந்தப்பகுதியில் ரூ.7.50 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை திறந்தது பொதுமக்களுக்கு வியப்பை வரவழைத்தது.பொதுமக்களில் சிலர், 'ரயில்வே மேம்பால பணியை தாமதமின்றி முடிக்க வேண்டும். விரைவில் இந்த வழியே பஸ் வசதியை துவங்க வேண்டும்' என்றனர். முன்னாள் மேயர் மருதராஜ், மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X