' காஷ்மீர் விவகாரத்தை டிரம்ப் உன்னிப்பாக கவனிக்கிறார்'

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
 ' காஷ்மீர் விவகாரத்தை டிரம்ப்  உன்னிப்பாக கவனிக்கிறார்'

வாஷிங்டன்:'ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் உன்னிப்பாக கவனித்து வருகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால், இந்த விவகாரத்தில் உதவுவதற்கு அவர் தயாராக உள்ளார்' என, அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதற்கு, அண்டை நாடான, பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


latest tamil news




'இந்த விவகாரத்தில், மத்தியஸ்தம் செய்வதற்கு தயார்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், 'இது இரு தரப்பு பிரச்னை. மற்ற நாடுகள் தலையீட்டை விரும்பவில்லை' என, மத்திய அரசு உறுதிபட கூறியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாக்., பிரதமர், இம்ரான் கானுடன், டிரம்ப் சமீபத்தில் தொலைபேசியில் பேசினார். அப்போது, 'இந்தியாவுக்கு எதிராக இம்ரான் கான் விரோதமாக பேசி வருகிறார்' என, மோடி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, விரோத பேச்சை குறைத்துக் கொள்ளும்படி, இம்ரான் கானிடம், டிரம்ப் வலியுறுத்தினார்.

பிரான்சில், 24 - 26 வரை நடக்கும், 'ஜி - 7' மாநாட்டின் போது, பிரதமர் மோடியை, டொனால்டு டிரம்ப் சந்திக்க உள்ளார். அப்போது, இந்தப் பிரச்னை குறித்து பேசப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை, அதிபர் டொனால்டு டிரம்ப் உன்னிப்பாக கவனித்து வருகிறார். இதனால், இந்த பிராந்தியத்தில் நிலவும் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். அதனால் தான், இந்தப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய அல்லது உதவுவதற்கு தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

இந்திய தரப்பில் இருந்து, இதுவரை எந்த பதிலும் இல்லை. இரு நாடுகளும் கேட்டுக் கொண்டால், இந்த விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு, டிரம்ப் தயாராக உள்ளார்.

ஜி - 7 மாநாட்டின்போது, மோடியும், டிரம்பும் சந்திக்க உள்ளனர். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து பேசப்படும். குறிப்பாக, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, டிரம்ப் பேசுவார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சக அதிகாரிகள் இடையேயான சந்திப்பு, நேற்று நடந்தது. இரு நாட்டின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையிலான பேச்சு, அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ளது. அதற்கு தயாராகும் வகையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,இந்தியா
24-ஆக-201912:44:19 IST Report Abuse
Thirumal Kumaresan அவரு அவரு வேலையை பார்க்கட்டும்.இது எங்கள் நாட்டு பிரச்சனை.நாங்கள் பார்த்து கொள்வோம்
Rate this:
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
24-ஆக-201908:56:52 IST Report Abuse
Pandiyan மனுஷன் கத்திய வேகமா தீட்டுறாரு எப்படி மூக்கை நுழைக்கலாம் என்று.. போறபோக்க பார்த்தா இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில கத்திய கூடிய சீக்கிரம் சொறுகிறுவாரு ..அப்போதானே அவருக்கு ஆயுத வியாபாரம் நடக்கும் ..
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
24-ஆக-201908:21:35 IST Report Abuse
blocked user மிச்சம் மீதி இருக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளை இனி அமெரிக்க மண்ணுக்கு மாற்றுவதுதான் இந்தியாவுக்கு செய்யும் உதவியாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X