அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீரமைக்காத கணேஷ் நகர் நுழைவு பாலம் ஓராண்டாகியும் கண்டுக்காமல் மெத்தனம்

Added : ஆக 24, 2019
Advertisement

விருதுநகர் : விருதுநகரில் கணேஷ் நகர் நுழைவுப்பாலத்தை உடைத்த அதிகாரிகள் அதை ஓராண்டாகியும் சீரமைக்காது மெத்தனபோக்கை கடை பிடிக்கின்றனர்.

விருதுநகரில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் பி.ஆர்.சி.,டெப்போ நிறைந்தது. இதன் நீரை வெளியேற்ற இதன் அருகே உள்ள கணேஷ்நகர் நுழைவு பாலத்தை பொதுப்பணித் துறையினர் உடைத்தனர். இது சர்வீஸ் ரோட்டில் இருந்து வேலுச்சாமி நகர் செல்வதற்கான முக்கியமான பாலம். தற்போது இப்பாலம் உடைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இன்று வரை இதை சீராக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டுக்காது அலட்சியம் காட்டுகின்றனர்.

இத்துறையினர் நீர்வரத்து கால்வாயை பராமரித்து ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி இருந்தால் மழை நீரும் முறையாக வெளியேறி இருக்கும். பி.ஆர்.சி., டெப்போவில் மழைநீர் தேங்க முழுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான் காரணம். நீரை வெளியேற்ற கடைசிநேரத்தில் பாலத்தை இடித்து இடையூறு ஏற்படுத்தியவர்களும் இவர்கள்தான். பொதுமக்களின் நலனை துளியும் கணக்கில் கொள்ளாத இவர்கள் பாலத்தை சீரமைக்க இது வரை நடவடிக்கை எடுக்காத இத்துறையினரின் செயல்பாடு எப்படி என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டாக அமைகிறது. இதற்கு நகராட்சி நிர்வாகமும் துணைபோய் ஓராண்டுக்கு மேலாகிறது. இது தொடர்பாக நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது, அப்போது என்கிறாரே தவிர வேலை துவங்கிய பாடில்லை. நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி கூறுகையில், ''டெண்டர் விடப்பட்டுள்ளது. மிக விரைவில் பணிகள் துவங்கும். இம்முறை நிச்சயம் பணிகள் நடந்துவிடும்,'' என உறுதி அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X