அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேரள முதல்வர் நிவாரணநிதிக்கு உண்டியல் பணத்தை வழங்கிய சகோதரிகள்

Added : ஆக 24, 2019
Advertisement

மூணாறு : கேரளா, மூணாறு அருகே கூடாரவிளை எஸ்டேட் நெற்றிகுடி டிவிஷனைச் சேர்ந்த கருப்பசாமி- மாலதி தம்பதியினரின் மகள்கள் சம்யுக்தா,8 பூவிதா,6 தீக் ஷா 5, ஆகியோர் மூணாறில் உள்ள அரசு ஆங்கிலோ,தமிழ் ஆரம்ப பள்ளியில் படித்து வருகின்றனர்.

கடந்தாண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின்போது கருப்பசாமி குடும்பத்தினருடன் நிவாரண முகாமில் தங்க நேர்ந்தது. அச்சூழல் குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்தது.கேரளாவில் இரு வாரங்களுக்கு முன் பெய்த கன மழையால், மலப்புரம்,வயநாடு ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதனையறிந்த சிறுமிகளுக்கு கடந்தாண்டு அனுபவித்த துயரங்கள் நினைவுக்கு வந்ததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் எண்ணம் மேலோங்கியது.

கேரளாவில் செப். 11ல் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு புத்தாடைகள் வாங்குவதற்கு பெற்றோர் கொடுத்த பணத்தை சிறுமிகள் உண்டியலில் சேமித்து வந்தனர். அந்த உண்டியல் பணத்துடன் பள்ளிக்குச் சென்றவர்கள், தலைமை ஆசிரியை மாரியம்மாவிடம்வழங்கினார். அதில் ரூ.893 இருந்தது. சிறுமிகளின் செயலால் நெகிழ்ந்த பள்ளி நிர்வாகம், அவர்கள் கொடுத்த பணத்துடன் மேலும் திரட்டிரூ.3,980ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X