அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி 2வது மண்டலத்திற்கு புதிய அலுவலகம் திறப்பு எப்போது?

Added : ஆக 24, 2019
Advertisement

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டல அலுவலகம் முன்னாள் தொட்டிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இங்கு போதிய இடவசதி இல்லாததால், உதவி கமிஷனர் மற்றும் கூட்ட அரங்கு மட்டுமே உள்ளது. மற்ற சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், உதவி பொறியாளர், குழாய் ஆய்வாளர், வரி வசூலிப்பவர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் ஆங்காங்கே உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி வளாகத்தில் அலுவலகம் அமைத்து பணியாற்றி வருகின்றனர்.பல்வேறு பணி நிமித்தமாக அலுவலகம் வரும் பொதுமக்கள் அதிகாரிகளை சந்திப்பதில் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனையொட்டி, போயம்பாளையம் நஞ்சப்பா நகரில் மண்டல அலுவலகம் கட்ட 2 கோடியே 57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மண்டல அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.

உதவி கமிஷனர், சுகாதார அலுவலர், உதவி பொறியாளர், கூட்டரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. அலுவலக சுற்றுச்சுவர், கழிப்பறை, முன்பக்கம் நுழைவாயில், படிக்கட்டு பூச்சு ஆகிய பணிகள் முழுமை பெறாமல் உள்ளது.அலுவலகம் கட்டும் பணியை விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.'அலுவலகம் கட்டும் பணி நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இன்னும் 10 சதவீதம் மட்டுமே உள்ளது. அடுத்த மாதம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X