பொது செய்தி

இந்தியா

கழிவுநீர் சுத்திகரிப்பு மோசம்: 13 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (8)
Advertisement

புதுடில்லி: பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களால், சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீரின் தரம், மிகவும் மோசமாக உள்ளதாகவும், இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும், தமிழகம் உட்பட, 13 மாநிலங்களுக்கு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுஉள்ளது.







உத்தரவு


கழிவுநீரை சுத்திகரித்து, மீண்டும் பயன்படுத்தும் வகையில், நாடெங்கும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும்படி, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, 124 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வெளியேற்றும் நீரின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது.இது தொடர்பாக,13 மாநிலங்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பிஉள்ளது. அதில், 'சுத்திகரித்து வெளியிடப்படும் நீரின் தரத்தை உயர்த்தும்வகையில் தகுந்தநடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.






தமிழகத்தில் 34


மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்ததில், மோசமாக உள்ளதாக கூறப்படும், 124 பொது கழிவுநீர்சுத்திகரிப்பு நிலையங்களில், 34 தமிழகத்தில் உள்ளன. மஹாராஷ்டிராவில், 24; ராஜஸ்தானில், 13; ஹரியானாவில், 14; கர்நாடகாவில், 11 சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என, கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஆக-201915:40:07 IST Report Abuse
Lion Drsekar சுத்தமான குடிநீருக்கே இங்கு வழிய காணுமாம்? குப்பை அல்ல தற்போது ராட்சச லாரிகள் வைத்துள்ளார்கள் அவர்கள் நமது சுற்று சுவற்றை அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடம் போல் தங்கள் மனம் போன போக்கில் இடித்து தள்ளுகிறார்கள், சாட்சியுடன் இந்த செய்தியை பதிவு செய்கிறேன், புதிதாக கட்டிய சுவற்றை மீண்டும் குப்பை அள்ளுண்போடு இடிக்கிறீரார்கள் சண்டை போட்டால் நான் இல்லை என்கிறார்கள், குடிகாரனை காவலர்கள் கையும் களவுமாக பிடித்தால் நான் ஒட்டியதை நீ பார்த்தாயா என்று ஒருமையில் பேசி தான் யார் என்று அட்டையை நீட்டி மிரட்டும் நபர்கள் போல் இவர்களும் தற்போது அடிவடையில் இருக்கிறார்கள், அப்படி இருக்க இங்கு எதுவுமே செய்ய முடியாத நிலை,ஒரு குளத்தில் அருகம் புல்லைப்போல ஒரு செய்தி முளைத்தால் அதை உடனே பிடுங்கி எறியலாம், ஆனால் அதை காடு போல் வளர விட்டு ஆண்டுதோறும் டெண்டர் விட்டு பல லட்சம் சம்பாதிப்பதுதான் ஜனநாயக மாறாகிப்போனதால், எல்லாமே இங்கு காசுதான், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
24-ஆக-201909:46:02 IST Report Abuse
அருணா சரி இல்லாத நிலையங்கள், அதை சார்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
24-ஆக-201907:59:24 IST Report Abuse
ashak பிஜேபி ஆட்சியின் அவலம்
Rate this:
Share this comment
venkat - chennai,இந்தியா
24-ஆக-201910:20:39 IST Report Abuse
venkatதமிழகத்தில் 34 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (அதாவது இந்தியாவில் சரி இல்லாதவற்றில் 25 சதவிகிதத்துக்கு மேல் தமிழகத்தில்) சரியில்லை என்றால் தமிழக கழிவுநீர், மாசுக்கட்டுப்பாடு வாரியங்கள், மாநில ஆட்சியை குறை சொல்ல வேண்டுமா ? அல்லது மத்திய பி ஜெ பி NDA ஆட்சியை குறை சொல்லவேண்டுமா? இந்தியாவை சுத்தம் செய்ய பி ஜெ பி NDA அரசு தலைமை பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கை போல 70 வருடங்களாக எந்த பிரதமரும், ஆட்சியும் இதுவரை எடுத்ததில்லை. ஏழைப் பெண்டிர் மானம் காக்க மட்டும் கடந்த 5 வருடத்தில் 9 கோடி இலவச மானிய வீட்டு கழிப்பறைகள் கட்டியுள்ளார். இது தவிர பெரும்பான்மை கிராம, நகர, வட்ட, மாவட்டங்கள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாமல் ஆக்கப் பட்டுள்ளன. பல புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், குப்பை சுத்திகரிப்பு, உரம், எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தூர் போன்ற பல நகரங்கள் குப்பையே இல்லாத தூய்மை நகரங்கள் ஆகின. சம்பந்தம் இல்லாமல் சவுதியில் இருந்து குருட்டுக் குப்பைக் கருத்து இடும் முன் கூகிளில் உண்மை தேடவும். போடவும்....
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
24-ஆக-201922:58:19 IST Report Abuse
ashakமாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மத்திய அரசின் கீழே உள்ளது , அவர்கள் என்ன செய்கிறார்கள்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X