காஷ்மீர் விவகாரம் : ஐ.நா.வில் பேச இம்ரான் கான் திட்டம்| Dinamalar

காஷ்மீர் விவகாரம் : ஐ.நா.வில் பேச இம்ரான் கான் திட்டம்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (25)
Share
இஸ்லாமாபாத்:அடுத்த மாதம் நடக்க உள்ள, ஐ.நா., சபை கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொது சபை கூட்டம், அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், பிரதமர், நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும், பாக்.,

இஸ்லாமாபாத்:அடுத்த மாதம் நடக்க உள்ள, ஐ.நா., சபை கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார்.



latest tamil news



அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொது சபை கூட்டம், அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், பிரதமர், நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும், பாக்., பிரதமர், இம்ரான் கான், செப்., 27ல் பேச உள்ளார். அப்போது, ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச உள்ளதாக, பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.


latest tamil news



நான்கு நாள் பயணமாக, செப்., 23ல் புறப்படும் இம்ரான் கான், மலேஷியா உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.இதற்கிடையே, ''ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்,'' என, பாக்., வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X