பா.ஜ., எதிர்ப்பு.. 70 ஆண்டு நஞ்சு: நக்வி

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (37)
Advertisement

புதுடில்லி: சிறுபான்மை மக்களிடையே பா.ஜ., எதிர்ப்பு என்பது 70 ஆண்டுகளாக விதைக்கப்பட்ட நஞ்சு என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.






இதுகுறித்து அவர் கூறியதாவது: பா.ஜ., 1980ல் துவக்கப்பட்டது. அதன் முன்னோடியான ஜன சங்கம், 1950களில் உருவானது. சிறுபான்மையின மக்கள் மனதில், பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு, 70 ஆண்டுகளாக விதைக்கப்பட்டு வந்துள்ளது. அதை, 70 நாட்களிலோ, ஏழு ஆண்டுகளிலோ துடைத்தெறிந்துவிட முடியாது. ஆனால், இந்த நஞ்சின் தாக்கம், தற்போது மெல்ல குறையத் தொடங்கி உள்ளது என, உறுதியாக நம்புகிறேன்.





மக்கள் தொகை பெருக்கம் குறித்த விழிப்புணர்வு தேவை. எந்த வித சட்டங்களும் இயற்றாமல் தூய்மை இந்தியா போன்று இது ஒரு இயக்கமாக மாற வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கைகளான முத்தலாக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்றவை சீர்திருத்த நடவடிக்கைகள். இவை செல்வாக்கை உயர்த்த மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
24-ஆக-201920:35:48 IST Report Abuse
Rafi இவர் அக்கட்சியின் முக்கிய தலைவர் மகளை திருமணம் முடித்திருப்பவர், அவருக்கு கௌரவமாக பதவிகள் கொடுத்து வைத்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
25-ஆக-201909:26:19 IST Report Abuse
Nallavan Nallavanசரியாய் புரிஞ்சுக்கிட்டீங்க ..... மனைவி பெயர் சீமா .........
Rate this:
Share this comment
Cancel
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
24-ஆக-201918:07:35 IST Report Abuse
Tamilachi ஜனசங்கம் ஆரம்பிச்சப்பவே இப்ப இருக்கற மோடி அமித்ஷா மாதிரி ஒரு இரட்டையர் கூட்டணி இருந்திருந்தா இந்நேரம் காஷ்மீர், ஆக்கிரமிப்பு சீனா எல்லாமே இந்நேரம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா ஒரே இந்தியாவாக உலக வல்லரசாக முன்னேறியிருக்கும்...இந்த ஓட்டுக்ககா சிறுபான்மையினரை தூக்கி பிடித்து பெரும்பான்மையினரை இழிவு படுத்தி பேசி இப்போது இந்தியாவை விட்டே காணாமல் போக போகும் காங்கிரஸினால்தான் இத்தனை சீரழிவுகளும்...எழுபது வருடமாக இவர்கள் சீரழித்த இந்தியாவை சீர்படுத்த பிஜேபிக்கு இன்னும் சில காலம் தேவைப்படும்...
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
24-ஆக-201916:41:09 IST Report Abuse
சுந்தரம் பாஜக கட்சி ஆரம்பிச்சதே 1980 ல தான். இப்போ அந்த கட்சிக்கு வயசு 39 தான். ஆனா சிறுபான்மை மக்களிடையே பா.ஜ., எதிர்ப்பு என்பது 70 ஆண்டுகளாக இருக்கு. எல்லாருக்கும் புரிஞ்சுதா.ஜோரா கை தட்டுங்க பாக்கலாம்
Rate this:
Share this comment
sethu - CHENNAI,இந்தியா
24-ஆக-201917:19:22 IST Report Abuse
sethu1950 ஜன சங்கம் உருவானது...
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
25-ஆக-201911:51:20 IST Report Abuse
சுந்தரம் . நக்வி சொல்வது பாஜக எதிர்ப்பு. ஜனசங்க எதிர்ப்பு அல்ல....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
25-ஆக-201911:53:01 IST Report Abuse
சுந்தரம் ஜன சங்கம் உருவானது 1951 ல் 1950 அல்ல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X