அரசியல் செய்தி

தமிழ்நாடு

பள்ளியில், ரூ.70 லட்சத்தில் பணி முன்னாள் மாணவருக்கு பாராட்டு

Added : ஆக 24, 2019
Advertisement

திருப்பூர் : கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளியில், 70 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகளை, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.திருப்பூர், தாராபுரம் ரோடு கொடுவாயில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 945 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவியர் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த பள்ளியின் முன்னாள் மாணவரான கே.எம்.நிட்வேர் ஏற்றுமதி நிறுவன நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் பள்ளியை தத்தெடுக்க முடிவு செய்தார்.

அதன்படி, முதல் கட்டமாக, 70 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பறை, கலையரங்கம் ஆகியவற்றை அமைத்துள்ளார். இதனை, கல்வித்துறை செங்கோட்டையன் திறந்து வைத்தார். விழாவில், காால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் பழனிசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் குணசேகரன், விஜயகுமார், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.பள்ளியை மேம்படுத்திய சுப்ரமணியன் மற்றும் தன்னார்வலர்களை, அமைச்சர்செங்கோட்டையன் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X