அரசியல் தலைவர்கள் காஷ்மீர் வர வேண்டாம்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (49)
Advertisement

ஸ்ரீநகர் : அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் காஷ்மீருக்கு வர வேண்டாம் என அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பல இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்., எம்.பி., ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு, இன்று (ஆக.,24) காஷ்மீர் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளன. காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நேரில் ஆய்வு செய்வதுடன், அம்மாநில மக்களை நேரில் சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் கூறி இருந்தனர்.

இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் காஷ்மீருக்கு வர வேண்டாம் என அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. காஷ்மீரில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்களின் வருகை காஷ்மீரில் உள்ள அமைதியையும், இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்கும் வகையில் அமையும் எனவும் காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு முயற்சித்து எடுத்து வருகிறது. அதே போன்று அசாம்பாவிதங்கள் இன்றி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் மூத்த அரசியல் தலைவர்கள் இங்கு வந்து மக்களின் இலங்பு நிலையை கெடுக்க வேண்டாம். காஷ்மீர் அரசின் நடவடிக்கைகளுக்கு அரசியல் தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


துணை ராணுவப்படையினர் குவிப்பு

இதன் இடையே, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர் வரும் எதிர்க்கட்சி தலைவர்களை, விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swega - Dindigul,இந்தியா
24-ஆக-201915:46:40 IST Report Abuse
swega ஒருவேளை ரியல் எஸ்டேட் வேலையாக வாரங்களோ என்னமோ.
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
24-ஆக-201915:24:09 IST Report Abuse
RM Only ruling party can visit. what is the motive for ruling party visit? Is there any motive for Ajitji visit and ate with public. ? The same way other parties can go there. It is a moral responsibility to confirm what ruling party stt. is true. This visit is only to visit common people and see the day-to-day life. In a democratic country other parties should have this right. This will prove the world that we have peace in that region .Few hours visit cannot instigate any problem.In fact BJP should have arranged a tour for other parties to get their opinion if real democracy rule is in India.
Rate this:
Share this comment
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
24-ஆக-201914:52:45 IST Report Abuse
V.B.RAM மூத்த அரசியல் தலைவர்கள் இங்கு வந்து மக்களின் இலங்பு நிலையை கெடுக்க வேண்டாம். ??? அதை சொல்ல நீ யார் ஏன் தானை தலைவன் ஸ்டாலின் வைகோ உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழர் எழுச்சி படை வீறுகொண்டு புரட்சிகரமாக புறப்பட்டுவிட்டது காஷ்மீர் நோக்கி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X