சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் போலீசுக்கு கொலை மிரட்டல்: மாஜி கணவர் கைது

Added : ஆக 24, 2019
Share
Advertisement

திருவண்ணாமலை: பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த, மாஜி கணவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், ஊரணி தாங்கல் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், 42, ஆலம்பூண்டி டாஸ்மாக் கடை விற்பனையாளர். இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரியும் கலைவாணி, 35, என்பவருக்கும், 2009ல், திருமணம் நடந்தது. இவர்களுக்கு தீபக், 9, என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2018ல், நீதிமன்றத்தில் முறையாக விவாகரத்து பெற்றுள்ளனர். இதை தொடர்ந்து கலைவாணி, திருவண்ணாமலை போலீஸ் குடியிருப்பில் மகனுடன் வசிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு, போலீஸ் குடியிருப்புக்கு, மாஜி கணவர் பிரபாகரன் சென்றார். அங்கு கலைவாணியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மானபங்கம் செய்துள்ளார். மேலும், அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கலைவாணி, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து பிரபாகரனை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X