பணத்துடன் போதையில் சுற்றிய வரை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணத்துடன் போதையில் சுற்றிய வரை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (10)
Share
கொள்ளை, வங்கி பணம், மீட்பு

பெரம்பலூர்: பெரம்பலூரில் போதையில் கட்டுக்கட்டாக பணத்துடன் சுற்றிய வாலிபரை ஆட்டோ டிரைவர் ஒருவர் போலீசில் ஒப்படைத்தார்.
பெரம்பலூர் புதிய மதன கோபால புரம் பகுதியை சேர்ந்தவர் மேக வர்ணம் மகன் முருகையா,42, இவர் பெரம்பலூர் நகரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று (ஆக.,23) இரவு 10 மணியளவில் பெரம்பலூர் பாலக்கரை அருகே சவாரிக்காக ஆட்டோவுடன் காத்திருந்தார். அப்போது, அங்கு டிராவல்ஸ் பேக்குடன் அங்கு வந்த நபர் ஒருவர், அருகிலுள்ள லாட்ஜுக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதைத் தொடர்ந்து பெரம்பலூர் பகுதியில் உள்ள லாட்ஜ்களுக்கு டிரைவர் முருகையா இவரை அழைத்துச் சென்றார். அங்கு சென்று அந்த நபர் ரூம் கேட்டபோது முகவரி ஆவணங்கள் இல்லாததால் அவருக்கு ரூம் தர லாட்ஜ் நிர்வாகத்தினர் மறுத்தனர். அதற்கு அந்த நபர் பையைத் திறந்து ஆவணங்களை எடுக்க முயன்றார். அப்போது அந்த நபர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக நிறைய பணம் இருந்ததை ஆட்டோ டிரைவர் முருகையா பார்த்தார்.

இதைத்தொடர்ந்து அந்த நபரை பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு சென்று ஆட்டோ டிரைவர் முருகைய்யா ஒப்படைத்தார். போலீசார் அவரிடமிருந்த பையை பறிமுதல் செய்து அதில் இருந்த 12 லட்சத்து 97 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


latest tamil news




மேலும் அந்த நபரிடம் விசாரித்ததில், திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஸ்ரீபன்,41 , என்பதும் இவர் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பும் லோகி கேஸ் ஏஜென்சி நிறுவனத்தில், பணியாற்றும் திருச்சி அம்பிகாபுரத்தை சேர்ந்த அருண் என்ற ஊழியரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து வந்ததும், போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, ஸ்ரீபனை திருச்சி கோட்டை ஸ்டேஷன் போலீசிடம் , பெரம்பலூர் போலீசார் ஒப்படைத்தனர். திருச்சி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X