மோடிக்கு யுஏஇ.,யின் உயரிய விருது

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
மோடி, ஐக்கிய அரபு எமீரேட்ஸ், யுஏஇ, விருது

அபுதாபி: 3 நாடுகள் சுற்று பயணத்தின் இரண்டாவது கட்டமாக, பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்தார். அங்கு, அவருக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.

பிரான்ஸ்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்று பயணம் மேற்கொண்டார். பிரான்சில் சுற்றுப் பயணம் முடித்து கொண்ட அவர், பாரீசில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி வந்தடைந்தார். அங்கு அவர், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானுடன், இரு தரப்பு உறவு, வர்த்தகம், இரு தரப்பு நலன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.


latest tamil newsயுஏஇயின் உயரிய விருதான ''ஆர்டர் ஆப் ஜாயீத்'' என்ற விருது மோடிக்கு வழங்கப்பட்டது.


latest tamil news
யுஏஇ பயணம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவு: அபுதாபியை வந்தடைந்தேன். பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயீத்துடன், பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன். இந்தியா மற்றும் யுஏஇ இடையிலான நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவேன். இந்த பயணத்தின் போது, இரு தரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதும் முக்கிய திட்டம் ஆகும் என பதிவிட்டுள்ளார்.யுஏஇ பயணத்தை முடித்த பின்னர் பிரதமர் மோடி பஹ்ரைன் சென்று, அந்நாட்டு அரசர் ஷேக் ஹமத் பின் இசா அல் கலிபாவை சந்தித்து பேச உள்ளார். பின்னர், மீண்டும் பிரான்ஸ் செல்லும் மோடி ஜி7 மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
25-ஆக-201912:09:36 IST Report Abuse
Krish Sami @புகழ்: வழக்கம் போல பேத்தல். வயிற்றெரிச்சல். அயல்நாட்டுடன் - அரபுநாடுகளும் அதில் அடக்கம் - பாரத பிரதமர் ஒப்பந்தம் போடாமல் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத - 1996 இல் ராமதாஸ் புண்ணியத்தில் பெற்ற மைனாரிட்டி ஆட்சி வாய்ப்புக்கு பின்னர் எப்போதுமே வெறும் இல்லைதான் தி மு க வுக்கு - ஸ்டாலினா ஒப்பந்தம் போடுவார்? ஹஹஹஹ. நாட்டின் பிரதமர் மோடி. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். அதுதான் நிலை.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
24-ஆக-201922:47:54 IST Report Abuse
Allah Daniel இந்த விருதை “மௌன மோகன் சிங்” ஏற்கனவே 6 முறை வாங்கி இருக்காரு..தெரியுமா..இப்படிக்கு “பப்பு” & காங்கிரஸ் ...
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
24-ஆக-201922:45:50 IST Report Abuse
Allah Daniel முல்லா முஸ்லிம்களுக்காகவே பிறந்து, முஸ்லிம்களுக்காகவே வாழ்ந்து, முஸ்லிம்களுக்காகவே வீழ்ந்த “கருணாநிதிக்கு” ஒங்க UAE பார்லிமண்டில் ஒரு சிலை வைக்கணும்...இப்படிக்கு DMK “பகுத்தறிவு” .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X