பொது செய்தி

இந்தியா

ஜெட்லி காலமானார்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (118)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. அருண் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக நடந்து முடிந்த லோக்சபாதேர்தலிலும் அவர்
jaitley, Arun Jaitley,BJP,அருண் ஜெட்லி,பா.ஜ,

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66.

அருண் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக நடந்து முடிந்த லோக்சபாதேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை.


முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான அருண் ஜேட்லி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 66 ஜேட்லிக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. கடந்த 9ம் தேதி ஜேட்லிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அருண் ஜேட்லி சிகிச்சை பலனின்றி சனியன்று உயிரிழந்தார். ஜேட்லியின் இறப்பிற்கு ஜனாதிபதி,பிரதமர் என பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்னர்.

latest tamil news
கடந்த 9-ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.


latest tamil newsஇந்நிலையில், இன்று (ஆக.,24) அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிற்பகல் 12.07 மணியளவில் ஜெட்லி உயிரிழந்துவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


latest tamil news

நாளை இறுதிச்சடங்கு


அருண் ஜெட்லியின் இறுதிச்சடங்கு நாளை(ஆக.,25) பிற்பகல் 2 மணிக்கு டில்லியில் நடைபெற உள்ளது. தற்போது, உடல், அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இதன் பின்னர், பேரணியாக, கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (118)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
25-ஆக-201906:43:03 IST Report Abuse
oce கள்ளி செடியை கற்பக விருட்சத்துடன் சேர்க்காகதீர். வரி போடாவிட்டால் விலைகளை கண்டவாறு ஏற்றி வியாபாரி சாப்பிட்டிருப்பான். அவன் சாப்பிடுவதை தடுத்து அரசாங்கத்திற்கு வருமானம் தர ஜிஎஸடி வரி கொண்டு வந்தனர். . அந்த பணம் நாட்டு மக்களுக்கு பயன்படுகிறது. இது புரிய வில்லையா.
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
25-ஆக-201900:26:32 IST Report Abuse
LAX ஆழ்ந்த இரங்கல்கள்..
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
24-ஆக-201922:54:17 IST Report Abuse
PANDA PANDI எது எப்படியோ எல்லாம் முடிந்துவிட்டது. இதிலிருந்து ஒன்றை கற்றுக்கொள்ளவேண்டும். ஆடின ஆட்டமும் பாடின பாட்டும் எல்லாம் சிலகாலமே அவன் அழைப்பான் தயாராகவேண்டும். எந்த கொம்பனும் அவனிடம் தோற்றாகவேண்டும். இருக்கும்வரை நாலு நல்லது செய்யலாமே மக்களுக்கு. இந்த சண்டை சச்சரவு எல்லாம் தேவையா என்றோ யோசிக்கவும் இந்தியா மக்களே. 333 இருக்கிறது என்று தலை கால் அறியாமல் சில மறைமுக விஷயங்கள் செய்தல் பலன் விரைவில். அவனிடம் யாரும் தப்பிக்க முடியாது. அவர் ஒரு நல்ல மனிதர் பாஸாகவிற்காக உழைத்தவர் வெற்றியும் கொண்டவர். ஆனால் அவர் நினைத்த முழு பலனையும் அனுபவிக்காமல் இந்த சிறு வயதினிலே நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.அவருக்காக இந்தியா மக்களின் எல்லா மதத்தினரும் அவருடைய ஆத்மாவுக்காக வேண்டிக்கொள்வோமாக. ஜெய் இந்தியா. சத்ய மேவ ஜெயதே. சுடலையும் ஜோக்கரும் எல்லாம் ஒன்றே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X