பொது செய்தி

இந்தியா

அருண் ஜெட்லி: வக்கீல் டூ அரசியல்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (9)
Advertisement
ArunJaitley, Arun Jaitley,BJP,அருண் ஜெட்லி,பா.ஜ

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி, டில்லியில் 1952 டிச., 28ல் பிறந்தார். அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏ.பி.வி.பி.,) தலைவராக இருந்துள்ளார்.

டில்லியில் பல்கலையில் படிக்கும் போது, மாணவர் தலைவராக இருந்துள்ளார். பி.காம்., மற்றும் சட்டம் முடித்தவர். மாணவர் பருவத்தில் கல்வியில் சிறந்து விளங்கினார். நாட்டில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதால், 19 மாதம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஊழலுக்கு எதிரான ஜெயப்பிரகாஷ் நாரயணன் போராட்டத்தில் இளைஞர் பிரிவில் முக்கிய தலைவராக விளங்கினார். ஜன சங்கத்தில் சேர்ந்த இவர், 1977 முதல் 1980 வரை டில்லி பகுதி ஏ.பி.வி.பி., தலைவராக செயல்பட்டார். கணக்கு தணிக்கையாளராக (சி.ஏ.,) விரும்பினார். ஆனால் தேர்வில் வெற்றி பெற முடியாததால், வழக்கறிஞர் துறையில் கவனம் செலுத்தினார்.
உச்சநீதிமன்றம் மற்றும் பல உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். 1989ல் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார். 1990ல் டில்லி உயர்நீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.விளையாட்டு:


டில்லி கிரிக்கெட் சங்க தலைவர், பி.சி.சி.ஐ., துணைத்தலைவர் மற்றும் ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சிலில் உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharatha Nesan - Chennai,இந்தியா
24-ஆக-201922:39:58 IST Report Abuse
Bharatha Nesan இந்தியாவில் அருண் ஜெய்ட்லி அவர்கள் ஒரு தலை சிறந்த பொருளாதார மேதை , அவரின் நாட்டுபற்று, மக்களுக்கும் இந்தியாவிற்கும் வளர்ச்சிக்காக செய்த சேவைகள் அளவிடமுடியாதது.
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
24-ஆக-201914:32:03 IST Report Abuse
s t rajan எத்தனையோ வக்கீல்கள் நாட்டின் மிக முக்ய அமைச்சர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவர் மட்டும் எப்படி தன் வாதாடும் திறமை, பதவி, புகழ் ஆகியவற்றை பணம் திரட்டவும் கொள்ளையடித்து வெளிநாடுகளில் மூலதனம் செய்யவும் முற்படவில்லை ? என்ன செய்வது நல்ல குணமுள்ள திறமையானவர்களைக் கடவுளும் விரும்புவார் போலிருக்கிறது,
Rate this:
Share this comment
24-ஆக-201915:24:34 IST Report Abuse
mannandhaiivarin izhappu chithambaram ayyavirku eeduseyya mudiyaatha izhappu...
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-ஆக-201914:08:29 IST Report Abuse
Malick Raja விபரீத எண்ணம் கொண்டவர்கள் சிந்திக்கவேண்டும் .. யாருக்கும் உலகம் இல்லை .. இருக்கவும்முடியாது இதை உணராமல் இருப்பதன் விளைவே விபரீத எண்ணங்கள் ,குறிக்கோள் கோட்பாடுகள் .. இன்றிருப்போர் நாளை இல்லை என்பதை மனிதர்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் இந்தியாவின் மேம்பாடு மட்டுமல்ல ஏன் உலகெமே மேம்பாட்டுக்கு தானாகவே வரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X