பொது செய்தி

இந்தியா

அமைச்சராக அசத்திய அருண் ஜெட்லி

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (9)
Advertisement
ArunJaitley, Arun Jaitley,BJP,அருண் ஜெட்லி,பா.ஜ

புதுடில்லி: அருண் ஜெட்லி, பா.ஜ., வில் 1991ல் இணைந்தார். 1999 லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். 1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரானார். 2000ம் ஆண்டு சட்டம், நீதித்துறை மற்றும் நிறுவன விவகார துறை அமைச்சரானார். பின் அமைச்சரவையில் இருந்து விலகிய இவர், 2002 - 2003ல் பா.ஜ., பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். 2003ல் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சரானார்.

2009 - 2014ல் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். 2014 லோக்சபா தேர்தலில் முதன்முறையாக தேர்தலில் களமிறங்கினார். பஞ்சாபின் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.
சிலகாலம் பாதுகாப்பு துறையையும் சேர்த்து கவனித்தார். இவரது பதவிக்காலத்தில் தான், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பல வரிகளை ஒன்றிணைத்து, ஒரே நாடு ஒரே வரி என்ற வகையில் ஜி.எஸ்.டி., வரி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களிலும் இவரது செயல்பாடு முக்கிய பங்கு வகித்தது.






2018 மே 14ல், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 2019 ஜனவரியில் சில நாட்கள் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். உடல்நலக்குறைவால் 2019 பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை, ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து மோடியின் இரண்டாவது அமைச்சரவையிலும் இவர் இடம்பெறவில்லை.






அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharatha Nesan - Chennai,இந்தியா
24-ஆக-201922:43:22 IST Report Abuse
Bharatha Nesan இந்தியாவில் அருண் ஜெய்ட்லி அவர்கள் ஒரு தலை சிறந்த பொருளாதார மேதை , அவரின் நாட்டுபற்று, மக்களுக்கும் இந்தியாவிற்கும் வளர்ச்சிக்காக செய்த சேவைகள் அளவிடமுடியாதது.
Rate this:
Share this comment
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
24-ஆக-201922:32:13 IST Report Abuse
Bharatha Nesan ந்தியாவில் அருண் ஜெய்ட்லி அவர்கள் ஒரு தலை சிறந்த பொருளாதார மேதை , அவரின் நாட்டுபற்று, மக்களுக்கும் இந்தியாவிற்கும் வளர்ச்சிக்காக செய்த சேவைகள் அளவிடமுடியாதது.
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
24-ஆக-201917:49:41 IST Report Abuse
Allah Daniel என்னதான் இருந்தாலும், .கார்த்தி P-சீ-dumb-பாரம் போன்ற ஒரு “தறுதலை”யை, இந்தியா அரசியலுக்கு கொண்டு வந்த P-சீ-dumb-பாரம்வின் சாதனை போல் வருமா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X