ஜெட்லி மறைவு: தலைவர்கள் இரங்கல்| Dinamalar

ஜெட்லி மறைவு: தலைவர்கள் இரங்கல்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி : உடல்நலக் குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.,24) காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.அதன் விபரம் :ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : வலிமையுடனும், துணிவுடனும் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் போராடிய ஜெட்லியின் மறைவு

புதுடில்லி : உடல்நலக் குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.,24) காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.latest tamil news
அதன் விபரம் :
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : வலிமையுடனும், துணிவுடனும் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் போராடிய ஜெட்லியின் மறைவு வேதனை அளிக்கிறது. திறமையான வழிக்கறிஞர், தன்மையான எம்.பி., புகழ்மிக்க அமைச்சர். நாட்டை கட்டமைப்பதில் அவரின் பங்கு அளப்பிட முடியாதது.


latest tamil news


துணை ஜனாதிபதி வெங்கையா: ஜெட்லியின் மறைவு, தேசத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு. எனது சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர் திறமையானவர், சிறந்த நிர்வாகி.


latest tamil news


Advertisement

பிரதமர் மோடி : அருண் ஜெட்லி பெரிய அரசியல்வாதி. உயர்ந்த அறிவாற்றல்மிக்க சட்ட வல்லுநர். வெளிப்படையான தலைவரை இந்தியா இழந்துள்ளது. அவரது மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது மனைவி சங்கீதா மற்றும் மகன் ரோஹன் ஆகியோரிடம் தொலைப்பேசியில் பேசி, எனது இரங்கலை தெரிவித்துள்ளேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.


latest tamil news


மத்திய அமைச்சர் அமித்ஷா : அருண் ஜெட்லியின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது. தனிப்பட்ட இழப்பாக நான் கருதுகிறேன். கட்சியின் மூத்த தலைவரை மட்டுமல்ல, எனது குடும்பத்தில் முக்கியமான உறுப்பினரை இழந்து விட்டது போல் உணர்கிறேன். எப்போதும் எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தவர்.


latest tamil news


மத்திய அமைச்சர் ராஜ்நாத்: அருண் ஜெட்லி மறைவு தற்போது தான் தெரியவந்தது. அவர், தேசத்திற்கும், அரசுக்கும், கட்சிக்கும் கிடைத்த சொத்து. ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்த டில்லி விரைய உள்ளேன் என்றார்


மன்மோகன் கடிதம்


ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்திற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதம்: ஜெட்லி மறைவு மூலம், சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பணியாற்றிய சிறந்த தலைவரை தேசம் இழந்துவிட்டது. சிறந்த பார்லிமென்ட்வாதி.இந்த சோகமான நேரத்தில், உங்களுக்கும், குடும்ப உறுப்பினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த பேரிழப்பை தாங்க, கடவுள் உங்கள் அனைவருக்கும் தைரியத்தை அளிக்க வேண்டும் என கடவுளை வேண்டி கொள்கிறேன்.


latest tamil news


மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி : நீண்ட மருத்துவ போராட்டத்திற்கு பிறகு அருண் ஜெட்லியின் மறைவு வேதனை அளிக்கிறது. திறமையான எம்.பி., சிறந்த வழக்கறிஞர், கட்சி வேறுபாட்டை கடந்து பலராலும் பாராட்டப்படுபவர். இந்திய அரசியலில் அவரது பங்களிப்பு மறக்க முடியாதது. அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


latest tamil news


தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: அருண் ஜெட்லி மறைவு அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது.


latest tamil news


தமிழக முதல்வர் பழனிசாமி : மாற்று கொள்கை கொண்டவர்களிடமும் அன்புடன் பழகக் கூடியவர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது.


latest tamil news


தமிழக அமைச்சர் ஜெயக்குமார் : அனைவரிடமும் எளிதாக பழகக் கூடியவர் அருண் ஜெட்லி. நல்ல மனிதரை நாடு இழந்து விட்டது. அருண் ஜெட்லியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

திமுக தலைவர் ஸ்டாலின்: ஜெட்லி மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பன்முக திறமை கொண்ட பண்பாளரும் சிறந்த பார்லிமென்ட் வாதியான ஜெட்லியின் மறைவு, பா.ஜ.,வுக்கு ஈடு செய்ய முடியாதது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X