பொது செய்தி

இந்தியா

திருப்பி அனுப்பப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (80)
Advertisement
காஷ்மீர், எதிர்க்கட்சி தலைவர்கள், ஸ்ரீநகர், ராகுல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை பார்வையிட சென்ற ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், ஸ்ரீநகரில் இருந்து டில்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பல இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காங்., எம்.பி., ராகுல், குலாம் நபி ஆசாத், டி.ராஜா, திருச்சி சிவா, சரத் யாதவ், மனோஜ் ஜா, உள்ளிட்ட 12 பேர் அடங்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் குழு, இன்று (ஆக.,24) காஷ்மீர் செல்ல உள்ளதாக அறிவித்தனர். காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நேரில் ஆய்வு செய்வதுடன், அம்மாநில மக்களை நேரில் சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் கூறி இருந்தனர்.







கோரிக்கை

அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் காஷ்மீருக்கு வர வேண்டாம் என அம்மாநில அரசு கேட்டுக் கொண்டிருந்தது. காஷ்மீரில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்களின் வருகை காஷ்மீரில் உள்ள அமைதியையும், இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்கும் எனவும் காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் வருகையை தொடர்ந்து, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.







திருப்பி அனுப்பல்

தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர்கள் விமானம் மூலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்தனர். ஆனால், விமான நிலையத்தை விட்டு வெளியே வர காஷ்மீர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அங்கிருந்தே, டில்லிக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஆக-201906:21:07 IST Report Abuse
பேசும் தமிழன் Rakim மற்றும் Rajas பாய் ....உங்கள் நாட்டு பற்று நினைத்தால் புல்லரிக்குது ....நீங்கள் அந்த பப்பு கான் அவர்களிடம் ஒன்று கேட்கலாம் ...நீங்கள் உங்கள் ஆட்சியின் போது ஊடக நண்பர்கள் என்று அந்த கான் சொல்லும் அல்லக்கைகளை ஏன் கூட்டி கொண்டு காஷ்மீர் செல்லவில்லை என்று ??? அப்ப இருந்ததை விட இப்போது நிலைமை எவ்வளவோ மேல் என்பதால் தான் அந்த பப்பி கான் காஷ்மீர் சுற்றுலா செல்ல தயாராகி விட்டார் .....இந்த நாட்டில் இருந்து கொண்டு நாட்டுக்கு எதிரான செயல் செய்வதை விட உங்களுக்கு பிடித்த நாட்டுக்கு தாராளமாக சென்று அந்த நாட்டுக்கு உண்மையாக இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-ஆக-201905:16:32 IST Report Abuse
J.V. Iyer நாட்டை கெடுப்பதற்கென்றே பிறந்தவர்கள் இந்த அரசியல் வாதிகள். எங்கேயாவது போர் நடந்தால் இவர்களை அங்கே போய்விடவேண்டும். இல்லையென்றால், இவர்களை பாகிஸ்தானிய எல்லையில் விட்டுவிட்டு வந்துவிட்டால் நாட்டில் அமைதி நிலவும். ஏன் செய்யவில்லை?
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
25-ஆக-201900:38:18 IST Report Abuse
elakkumanan ஏப்பா, பப்பு மற்றும் சிறுபான்மை மக்களே, உங்களுக்கு காஸ்மீரில், பிரச்சினை தீரணுமா? இல்லை பிரச்சினை இருந்துகிட்டேயே இருக்கணுமா? உங்கள் நோக்கம் என்னப்பா? அங்க, பிரச்சினை இருக்குன்னுதானே இத்தனை முன்னேற்பாடுகள். ஒண்ணுமே இல்லாத இடத்துக்கு இத்தனை பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, மோடியும், ஷாவும் என்ன வீணாப்போன காயலான் கடை பப்பு இல்ல திருட்டு மு க கூட்டம்னு நெனசிங்களா? பிரச்சினை இருக்கு. தீர்க்க நடவடிக்கை எடுக்கிறாங்க. எழுபது வருசமா, நீங்க திட்டம் போட்டு திருடி, ஒட்டு பொறுக்குன தெருவை சுத்தம் பண்ணுறாங்க. கொஞ்சம் தூசி பறக்கலாம். கொஞ்சம் பேரு செத்துக்கூட போகலாம். எழுபது வருசமா, 45000 பேரு செத்துருக்காகங்க. நீங்க .................ஆணி பெயர்த்த வள்ளலு. இப்போ, ஒன்னு ரெண்டு பேரு செத்து போனா ஒன்னும் குடி முழுகிப்போகாது, மீதி இருக்குறவனுங்க நல்லா இருக்கலாம்ல. எத்தனை லட்சம் கோடிகள் கணக்கு எழுதி திருடி, பிரிச்சுக்கிட்டிங்க. இப்போ, அது முடியாதுன்னுதானே, கெடந்து அடிச்சுக்கிறீங்க. இனி, உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமனம் தான். எப்போதும் எந்திரிக்க முடியாது. ஒரு வீரன், தேச பக்தன், ஆண் மகன், நேர்மையானவன் , நம்மளால எழுபது வருசமா ஒரு இன்ச் கூட தள்ள முடியாத ஒரு விஷயத்தை பெயர்த்து எறிஞ்சுருக்கான்னா, நீங்கள் (பப்பு, சிறுபான்மை, கட்டுமரம்) அரசியலை விட்டு விலகியிருந்தால் உங்களை மக்கள் பாராட்டியிருப்பார்கள். கல்லாலயே அடிச்சு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது, இந்த வீராப்பு, எங்க போச்சு. ரொம்ப முக்கியமா திருடுன பணத்தை எண்ணிகிட்டு இருந்தீர்களா? இவனுங்களை இன்னும் ஒரு சிறு கோஷ்டி ஆதரிக்குது. என்ன ஜென்மங்களோ. சொந்த நாட்டுக்கு நல்லது நெனைக்ககூட முடியலீனா, போகவேண்டியதுதானே புண்ணிய பூமிக்கு. உங்க மனைவி மக்களை கூட்டிகிட்டு. தெரியுதுல்ல. அடி வயிறு பகீர்னு இருக்குல்ல. அப்பொறம் ஏன், எரியுது. இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கூட ஒங்க பக்கிக்கு, பப்புக்கு, ஆதரவு தரல. திரும்பிக்கூட பாக்கல. யாராவது ஒருத்தனுக்கு ஒரு எடத்துலயாவது, ஒரு கட்டத்துலயாவது உண்மையா இருக்க ட்ரை பண்ணுங்க. நாடு, அதுக்கு பிறகுதான், மதம். நாடு வேணும்னா, மதமும், வாழ்வும் இங்கயே கிடைக்கும். மதம்தான் வேண்டும்னா, ரோஷமா, கெளம்பி போக்கலாம்ல புண்ணிய பூமிக்கு. சொந்த பேருல கருத்து எழுத முடியாத மாவீரர்களே. யோசிங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X