பொது செய்தி

இந்தியா

விவாதத்திற்காக ரூ.35 ஆயிரம் செலவழித்த ஜெட்லி

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த 2011 ஆக., 18 ல், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென் என்பவரை, பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் மீதான விவாதம் ராஜ்யசபாவில் நடந்தது. விவாதம் துவங்குவதற்கு முன்னர், ராஜ்யசபாவிற்கு, அருண் ஜெட்லி ஏராளமான புத்தகங்களுடன் வந்தார். அந்த புத்தகங்கள் கனமானதாகவும், புதிதாகவும் இருந்தன.ஜெட்லியின் பொறுப்புணர்வுஇது குறித்து ஜெட்லி அப்போது கூறுகையில்,
ArunJaitley,BJP,அருண் ஜெட்லி,பா.ஜ

புதுடில்லி: கடந்த 2011 ஆக., 18 ல், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென் என்பவரை, பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் மீதான விவாதம் ராஜ்யசபாவில் நடந்தது. விவாதம் துவங்குவதற்கு முன்னர், ராஜ்யசபாவிற்கு, அருண் ஜெட்லி ஏராளமான புத்தகங்களுடன் வந்தார். அந்த புத்தகங்கள் கனமானதாகவும், புதிதாகவும் இருந்தன.


ஜெட்லியின் பொறுப்புணர்வு


இது குறித்து ஜெட்லி அப்போது கூறுகையில், கோர்ட்டில், சட்ட நுணுக்கங்கள், ஆதாரங்களுடன் நடக்கும் வாதங்களை போல், ராஜ்யசபாவிலும் நடக்கும் விவாதத்திற்கு தயாராக ரூ.35 ஆயிரம் செலவு செய்து புத்தகங்களை வாங்கி படித்தேன் என்று கூறினார். இது அவர், வழக்கறிஞராகவும், பார்லிமென்ட் விவாதங்களை எப்படி அவர் முக்கியமாக எடுத்து கொள்கிறார் என்பதை எடுத்து காட்டியது.


முதல் நீதிபதி


சவுமித்ரா சென்னுக்கு எதிராக முறைகேடு புகார் கூறப்பட்டது. இதனையடுத்து, அவரை பதவி நீக்குவதற்கான தீர்மானம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, லோக்சபாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு விவாதத்திற்கு முன்னரே, சவுமித்ரா சென் ராஜினாமா செய்தார்.


மைல்கல்


கடந்த 2002ம் ஆண்டில், வாஜ்பாய் ஆட்சி காலத்தில், ஜெட்லி சட்டத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, கட்சி தாவலுக்கு தடை விதிக்கும் வகையில் 91வது அரசியல் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது அவரது பதவி காலத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.


latest tamil news

புது உத்வேகம்


கடந்த 2004 முதல் 2014 வரை ஜெட்லி ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார். 2009 முதல் 2014 வரை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். அப்போது, லோக்சபா எதிர்க்ட்சி தலைவராக சுஷ்மா சுவராஜ் இருந்தார். இது பாஜ பார்லி குழுவில் ஏற்பட்ட தலைமுறை மாற்றத்தையும், எதிர்க்கட்சி அரசியலில் புதிய உத்வேகத்தையும் ஏற்படுத்தியது.
2010 மார்ச் மாதம் , லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவாதத்திற்கு வந்தது. அப்போது, வாஜ்பாய் ஏற்கனவே ஆதரவு தெரிவித்த இந்த மசோதாவிற்கு பா.ஜ.,வும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஜெட்லி வலியுறுத்தி, கட்சி மேலிடத்தை சம்மதிக்க வைத்தார்.


அமளி


அரசியல் லாபத்திற்காக பார்லிமென்டில் அமளி ஏற்படுத்துவதாக, ஜெட்லி மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியது. நிலக்கரி ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த போது, 2012 ஆக., மாதம், அமளி ஏற்படுத்துவது குறித்து பேசும் போது, பல சந்தர்ப்பங்களில், பார்லிமென்டில் ஏற்படுத்தப்பட்ட தடைகள், நாட்டிற்கு பெரிய பலன்களை கொடுத்ததாக கூறினார்.
இதனையே, 2014 பாஜ., வெற்றிக்கு பின்னர், எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. ஆனால், ஜெட்லி, அமளி குறித்து பேசிய இரண்டு நாட்களுக்கு பின்னர், தனது கருத்தை திருத்தி, '' பார்லிமென்டில் தடைகள் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனை அரிதிலும் அரிதான சந்தர்ப்பங்களில் ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டும்'' என்றார். இந்த கருத்தை எதிர்க்கட்சிகள் மறந்துவிட்டன.


latest tamil news

எதிர்கட்சிகளுடன் நட்பு


வாஜ்பாய்க்கு பின்னர், ஜெட்லி, தனது அரசியல் அறிவால் துடிப்பான மற்றும் திறமை வாய்ந்த எம்.பி.,யாக உருவெடுத்தார். அவர் காங்கிரஸ் கட்சியை, குறிப்பாக, நேரு குடும்பத்தினரை கடுமையாக தாக்கி பேசினார். ஆனால், தனிப்பட்ட முறையில் எந்த விமர்சனத்தையும் ஜெட்லி முன் வைத்தது இல்லை.
பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான இந்த மோதல் நீண்ட நாட்களாக நீடித்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் முகாமில் உள்ள நண்பர்களுடனான தனது உறவை ஜெட்லி எப்போதும் இழக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுலை, நேரில் சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு ஜெட்லி அழைப்பு விடுத்தார். ஆனால், ராகுலை கடுமையாக விமர்சிக்கவும் செய்தார்.


நட்புறவு


ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில், அரசு மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்தார். ஆனால், 2014 தேர்தல் முடிவுக்கு பின்னர், மன்மோகன் சிங், சிறந்த நிதி அமைச்சர். இதில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது எனக்கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீதும் அதிக மதிப்பு வைத்திருந்தார். பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றால், அவர் அருகில் ஜெட்லி அமர்ந்து நீண்ட நேரம் கலந்துரையாடுவார்.

ராஜ்யசபாவில், எம்.பி.,க்கள் தங்களது பேச்சில், எதாவது தவறு விட்டால், அதனை உடனடியாக திருத்தவும் ஜெட்லி தயங்கியது இல்லை. எதிர்க்கட்சியாகவும், நிதி சார்ந்த பொறுப்புகளில் இருந்ததாலும், பார்லிமென்ட் நடவடிக்கைகளில் ஜெட்லிக்கு நீண்ட அனுபவத்தை கொடுத்தது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - Chennai,இந்தியா
29-ஆக-201916:26:12 IST Report Abuse
murali சிதம்பரம் ஒரு பேட் மென். அருண் ஜைடெல்லி சிதம்பரம் கூட நட்பு பாராட்டியது தவறு
Rate this:
Cancel
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
25-ஆக-201907:04:04 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் ஏனோ போபால் விஷவாயு விவகாரத்தில் இந்தியர்களுக்கு எதிராக வாதாடிய விஷயம் நினைவில் வந்து போகிறது
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-ஆக-201905:00:02 IST Report Abuse
J.V. Iyer உண்மையான, நேர்மையான, திறமையான, கண்ணியமான, பேச்சாற்றல் மிக்க அரசியல்வாதி திரு அருண்ஜி. இந்தியாவுக்கு பெரும் இழப்பு. அண்மையில் சுஷ்மா சிவராஜ், இப்போது அருண்ஜி. RIP
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X