பொது செய்தி

இந்தியா

ஜெட்லி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
arunjaitley, Arun Jaitley,BJP,அருண் ஜெட்லி,பா.ஜ

புதுடில்லி முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.


latest tamil news



முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவமனையில் அவரது உடலுக்கு, பிரதமர் மோடி சார்பில் மத்திய அமைச்சர் ஹர்சவர்தனும், பா.ஜ., தலைவர் அமித்ஷா சார்பில், செயல் தலைவர் நட்டாவும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


latest tamil news


Advertisement


இதன் பின்னர், ஜெட்லி உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து, அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.


latest tamil news



அங்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜெட்லி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜெட்லி, குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.


latest tamil news




latest tamil news


ஜெட்லி உடலுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், குடும்பத்தினருக்கு, ஆறுதல் கூறினார்.


latest tamil news





latest tamil news


வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.


latest tamil news


மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர், ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


latest tamil news



டில்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


latest tamil news



காங்கிரஸ் கட்சியின் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஜெட்லி, டில்லி கிரிக்கெட் சங்க தலைவர் பதவி வகித்ததாலும், பிசிசிஐ துணை தலைவராகவும் இருந்ததாலும், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், இந்திய அணியினர் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஆக-201912:49:00 IST Report Abuse
ருத்ரா ஜெட்லி அவர்களின் உடல் நிலை கவலைக்கிடம் என்று செய்தி வந்த போதே அந்த செய்தியை பார்க்கு மன நிலை மனோ திடம் வரவே இல்லை. வேதனை
Rate this:
Cancel
venkatesan - chennai,இந்தியா
24-ஆக-201918:35:03 IST Report Abuse
venkatesan MAY HIS SOUL REST IN PEACE, WE HAVE LOST GREAT NATIONAL LEADER,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X