பொது செய்தி

தமிழ்நாடு

பால் விலையை அடுத்து மின் கட்டணமும் உயர்கிறது!

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
பால் விலை,  மின் கட்டணம், உயர்கிறது!

தமிழக மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, அரசும், மின்சார ஒழுங்கு முறை ஆணையமும் ஆலோசித்து வருகின்றன. 2014க்கு பின், ஐந்து ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதால், விரைவில், மின் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மின் வாரியத்திற்கு, மின் கட்டணம் மற்றும், அரசு மானியம் வாயிலாக, ஆண்டுதோறும், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.மின்சாரம் கொள்முதல், எரிபொருள், ஊழியர்கள் சம்பளம் என, செலவு, அதை விட அதிகம் உள்ளது. இதனால், வருவாய் பற்றாக்குறை ஏற்படுகிறது.தமிழகத்தில், மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம், மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் உள்ளது. இது, ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.


அறிக்கை


மின் வாரியம், தன் மொத்த வருவாய் தேவை அறிக்கையை, ஆண்டு தோறும், நவம்பர், 30க்குள், ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.அதில், அந்த நிதியாண்டின், ஏப்., முதல் அக்., வரை, மின்சார விற்பனை, மின் கட்டணம் வசூல், மின் கொள்முதல் செலவு, எரிபொருள் செலவு, கடன் என, மின் வாரியத்தின் அனைத்து விபரங்களும் துல்லியமாக இருக்க வேண்டும்.அந்த அறிக்கையை, ஆணையம் ஆய்வு செய்து, வரவை விட செலவு அதிகம் இருந்தால், பற்றாக்குறையை ஈடுகட்ட, மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யும். செலவை விட, வரவு அதிகம் இருந்தால், கட்டணத்தை குறைக்கலாம். இல்லையெனில், ஏற்கனவே உள்ள கட்டணமே தொடர அனுமதிக்கும்.மின் கட்டணத்தை உயர்த்தும் முன், சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில், மக்களிடம், கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். பின், சென்னையில், நுகர்வோர் அமைப்புகள், தொழிற்சாலை பிரதிநிதிகள் அடங்கிய, மாநில ஆலோசனை குழுவின் கருத்துகள் கேட்கப்படும்.இந்த பணிகள் முடிவடைந்ததும், புதிய கட்டணம் அறிவிக்கப்படும். மின் வாரியம், குறித்த காலத்திற்குள், வருவாய் தேவை அறிக்கையை, ஆணையத்திடம் சமர்ப்பித்தது கிடையாதது. அதன்படி, 2018 - 19ம் நிதியாண்டிற்கான அறிக்கையை, இதுவரை சமர்ப்பிக்கவில்லை.அந்த அறிக்கையை, மின் வாரியம் தாக்கல் செய்யாத நிலையில், ஆணையமே, தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தாமாகவே முன்வந்து, மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. அதன்படி, ஆணையம், 2014ல், 15 சதவீத அளவுக்கு, மின் கட்டணத்தை உயர்த்தியது.தமிழகத்தில், 2018ல், மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டது.

ஆனால், 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் இந்த ஆண்டின், லோக்சபா தேர்தலால், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.ஆணையத்தின் உறுப்பினராக இருந்த ராஜகோபால், இந்த ஆண்டு ஜனவரியிலும், தலைவராக இருந்த அட்சயகுமார், ஜூனிலும் ஓய்வு பெற்றனர்.நீண்ட இழுபறிக்கு பின், உறுப்பினர் பதவிக்கு, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியான, வெங்கடசாமி, ஜூலை, 2ல் நியமிக்கப்பட்டார்.ஜூன், 30ல், மின் வாரியத்தின், மின் உற்பத்தி பிரிவு இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற, சந்திரசேகர், இம்மாதம், 16ல், ஆணைய தலைவராகநியமிக்கப்பட்டார்.இதனால், ஆணையம், பல நாட்களுக்கு பின், மூன்று பேர் தலைமையில், தற்போது, முழு வீச்சில் செயல்பட துவங்கியுள்ளது. எனவே, மின் வாரியம், வருவாய் தேவை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றாலும், ஆணையமே, மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 2003க்கு பின், 2012ல் தான், 37 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. பின், வருவாய் தேவை அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில், 2014ல், ஆணையமே, 15 சதவீத கட்டணத்தை உயர்த்தியது.
அதிக விலை

தற்போது, மின் வாரிய நிதி நிலைமை மோசமாக உள்ளது. இதற்கு, அதிக விலைக்கு, ஒப்பந்த வேலைகளை வழங்குவது உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன.ஆண்டுதோறும் வாரியத்தின் செலவும் அதிகரிக்கிறது. இதனால், ஆண்டுதோறும், வருவாய் தேவை அறிக்கையை, நவம்பருக்குள் சமர்ப்பித்தால், அதை ஆய்வு செய்து, யூனிட்டிற்கு, 10 காசுகள் வரை கட்டணத்தை உயர்த்தலாம். இதனால், யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.ஆனால், மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு உயர்த்தவில்லை என கூறி, ஒரே சமயத்தில், அதிக அளவுக்கு, கட்டணத்தை உயர்த்துவதால் தான், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அது தான், தமிழகத்தில் தொடர்ந்து நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


அரசு அவசர ஆலோசனை!மின் வாரிய நிதி செயல்பாடு தொடர்பாக, நிதித்துறை செயலர், கிருஷ்ணன், சென்னை, தலைமை செயலகத்தில், மின் வாரிய அதிகாரிகளுடன், இம்மாதம், 20ம் தேதி ஆலோசனை நடத்தினார்.அதேபோல், மின் வாரிய செயல்பாடுகள் தொடர்பாக, எரிசக்தி துறை செயலர் மற்றும் மின் வாரிய உயரதிகாரிகளுடன், முதல்வர், இ.பி.எஸ்., சமீபத்தில், ஆலோசனை நடத்திஉள்ளார்.அதில், மின் வாரியம், வருவாய் தேவை அறிக்கையை, ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்ப்பிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.அதேசமயம், அறிக்கையை சமர்ப்பிக்காத நிலையில், ஆணையத்தையே, மின் கட்டணத்தை உயர்த்தி தருமாறு, வாய்மொழியாக கேட்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.அப்போது தான், பொது மக்களிடம், 'ஆணையமே தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது; அதில், அரசு தலையிட முடியாது; மின் கட்டண உயர்விற்கும், அரசுக்கும் தொடர்பு இல்லை' என, விளக்கம் அளிக்க முடியும் என, ஆட்சியாளர்கள்கருதுகின்றனர்.


மானிய செலவு குறைப்பு!வீடுகளுக்கு, 100 யூaனிட் வரை, இலவசமாகவும்; 101 யூனிட்டில் இருந்து, 500 யூனிட் வரை, மானிய விலையிலும், மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்கு மேல், மானியமின்றி, முழு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மானிய செலவை, தமிழக அரசு, மின் வாரியத்திற்கு வழங்குகிறது.மத்திய அரசின், 'உதய்' திட்டத்தில், 2017ல், தமிழகம் இணைந்தது. இதனால், மின் வாரியத்தின், அதிக வட்டி கடன், 22 ஆயிரத்து, 815 கோடி ரூபாயை, தமிழக அரசு ஏற்றது. இதனால், மின் வாரியத்தின் வட்டி சுமை, ஆண்டுக்கு, 2,880 கோடி ரூபாய் மிச்சமானது.ஆணையம், 2017ல், புதிய மின் கட்டண ஆணையை வெளியிட்டது. அதில், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேசமயம், வீடுகளுக்கான இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்திற்காக, அரசு மின் வாரியத்திற்கு வழங்கும், 4,500 கோடி ரூபாய் மானிய தொகையில், 2,000 கோடி ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டது. - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
25-ஆக-201921:57:05 IST Report Abuse
PANDA PANDI நாசமா போச்சு எல்லாம். இப்படி படுபாதாளத்தில் தள்ளிவிட்டிருவார்கள்.
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
25-ஆக-201921:10:58 IST Report Abuse
A.Gomathinayagam மின் சாரத்துக்கு கொடுக்கும் மானியத்தை நிறுத்த வேண்டும்
Rate this:
Cancel
SUBRAMANIAN P - chennai,இந்தியா
25-ஆக-201919:40:18 IST Report Abuse
SUBRAMANIAN P மின்சாரவாரியத்துல முதல்ல எல்லாரும் அவங்கவங்க வேலையை பணிநேரம் முழுவதும் செய்யுறாங்களா இல்ல....அட்டெண்டென்ஸ் போட்டுட்டு வேற சொந்த தொழில் செய்யுறாங்களானு பாருங்க..அப்புறம் உள்ள வேலைசெய்யுறந்தவங்க பார்ட்ஸை திருடி வெளில விற்று சைடுல சம்பாதிக்கிறாங்களானு பாருங்க. இப்படி உள்ள நடக்குற நிறைய கோல்மால்களை கண்டுபிடித்து சரிபண்ணுங்க. அப்புறம் எல்லாம் சரி ஆகிடும். ஆமாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X