தமிழக அதிகாரி காஷ்மீரில் தற்கொலை

Added : ஆக 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி,: தமிழகத்தின், கோவையை சேர்ந்தவர், அரவிந்த், 30. காஷ்மீரில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், துணை கமாண்டன்டாக, பணியாற்றி வந்தார். சமீபத்தில், விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த அரவிந்த், 14ம் தேதி தான், திரும்பவும் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், அனந்த்நாக்கில், தன் வீட்டில் இருந்த அவர், திடீரென, தன் துப்பாக்கியால், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்தார். விசாரணையில், திருமணம் விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் தற்கொலை செய்ததாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, சி.ஆர்.பி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரவிந்த் தற்கொலை தொடர்பாக, சமூக வலைதளங்களில், பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. சொந்த பிரச்னை காரணமாகவே, அவர் தற்கொலை செய்துள்ளார். அவரது உடல், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.இருந்தாலும், அரவிந்த் தற்கொலை தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
25-ஆக-201908:52:03 IST Report Abuse
அம்பி ஐயர் அவரு என்ன ஜாதி... மதம்...னு பாருங்க... தாழ்த்தப்பட்ட அல்லது முஸ்லிம் ஆக இருந்தால் யோகம் தான் சுடலை.... வைகோ...குருமா... சீமான் & கோவினருக்கு.... அடடா.... அவுரு பேரு அரவிந்த்தாமே... இந்து போல இருக்கே.... வட போச்சே....
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
25-ஆக-201900:42:43 IST Report Abuse
elakkumanan சுடலை சார், ஒட்டு பொறுக்க ஏதாவது வழி இருக்கானு பாருங்க. காஸ்மீர் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால், உயிரிழந்தது ஒரு இந்து ராணுவ அதிகாரி. ட்ரை பண்ணுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X