நான்கு மாநில தேர்தல் வெற்றிக்கு அமித் ஷா இலக்கு: ராஜ்யசபாவில் பலத்தை அதிகரிக்கவும் வியூகம்

Updated : ஆக 26, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
நான்கு மாநில தேர்தல், அமித் ஷா இலக்கு, ராஜ்யசபா, வியூகம்

புதுடில்லி: மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா, டில்லி மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 'இந்த மாநிலங்களில், லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியை விட கூடுதலாக, மூன்றில், இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும்' என, பா.ஜ., தலைவர், அமித் ஷா இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இந்த நான்கு மாநிலங்கள் வெற்றி மூலம், ராஜ்யசபாவிலும், பா.ஜ.,வின் பலத்தை அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.நாட்டின், 17வது லோக்சபா தேர்தல், ஏப்ரல், மே மாதங்களில் நடந்தது. இதில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 353 இடங்களில் வென்று, ஆட்சியை தக்க வைத்தது. 2014 லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, இம்முறை, தே.ஜ., கூட்டணிக்கு, மிக அதிகமான ஓட்டுகள் கிடைத்தன.வட மாநிலங்களில், பா.ஜ., மிகப்பெரும் வெற்றியை பெற்றது. ஆனால், தென் மாநிலங்களில், கர்நாடகாவை தவிர, மற்ற நான்கு மாநிலங்களில், பா.ஜ., வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், வரும் அக்டோபரில், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தலைநகர் டில்லியில், அடுத்த ஆண்டு துவக்கத்தில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இந்த நான்கு மாநிலங்களிலும், லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியைவிட கூடுதலாக, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என, கட்சியினருக்கு, அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, நான்கு மாநிலங்களிலும், பா.ஜ., தேர்தல் பணிகளை துவக்கியுள்ளது.


ஆலோசனைதேர்தல் பணிகள் பற்றி, நான்கு மாநிலங்களையும் சேர்ந்த, பா.ஜ., தலைவர்களுடன், அமித் ஷா அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.சாதாரணமாக, தேர்தலுக்கு முன்பே, முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது, பா.ஜ.,வின் வழக்கம், ஆனால், கடந்த முறை, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா மாநிலங்களில், முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தான், பா.ஜ., போட்டியிட்டது;

தேர்தலுக்கு பின் தான், முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.ஆனால், இம்முறை, மூன்று மாநிலங்களிலும், இப்போதுள்ள முதல்வர்கள் தலைமையிலேயே தேர்தலை சந்திக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளதுடில்லியில், 1993 - 98ல், பா.ஜ., ஆட்சி இருந்தது, அதன் பிறகு, அங்கு, பா.ஜ.,வால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால், இம்முறை, அங்கு எப்படியும் ஆட்சியை கைபற்றிவிட வேண்டும் என, அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.மஹாராஷ்டிராவில், மொத்தம் உள்ள, 288 இடங்களில், பா.ஜ.,வுக்கு, 123 எம்.எல்.ஏ.,க்களும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு, 61 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.ஜார்க்கண்டில், மொத்தம் உள்ள, 82 தொகுதிகளில், 41 எம்.எல்.ஏ.,க்களும், ஹரியானாவில், மொத்தம் உள்ள, 90 தொகுதிகளில், 47 எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ.,வுக்கு உள்ளனர்.மஹாராஷ்டிராவில், இம்முறை, 216 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என, அமித் ஷா இலக்கு நிர்ணயித்துள்ளார்.

அதேபோல், ஜார்க்கண்டில், 62 தொகுதிகளுக்கு அதிகமாகவும், ஹரியானாவில், 68 தொகுதிகளுக்கு அதிகமாகவும் வெற்றி பெற வேண்டும் என, அவர் இலக்கு நிர்ணயித்து உள்ளார்.இதற்காக, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து தீவிரமாக பிரசாரம் செய்ய, பா.ஜ.,வினருக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.


பிரசார ஆயுதம்மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால், இந்த விஷயத்தையே, முக்கிய பிரசார ஆயுதமாக பயன்படுத்த, அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.அதேபோல், டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சியின், ஐந்தாண்டு கால முறைகேடுகள் பற்றி தீவிர பிரசாரம் மேற்கொள்ள, பா.ஜ., முடிவு செய்துள்ளது.லோக்சபாவில், பா.ஜ.,வுக்கு, 353 எம்.பி.,க்கள் பலம் உள்ள நிலையில், ராஜ்யசபாவில் இப்போதும் எதிர்க்கட்சியினரே அதிகம் உள்ளனர். இந்த நிலையை மாற்ற, பெரும்பாலான மாநிலங்களில், பா.ஜ., அரசு அமைப்பதையும், அவற்றின் மூலம், ராஜ்யசபாவில் பலத்தை அதிகரிக்கவும், அமித் ஷா திட்டமிட்டுள்ளார். இதனால், ஆட்சி அமைக்கும் அளவுக்கு மட்டுமே, இம்மாநிலங்களில் வெற்றி பெறுவது போதாது என்றும், ராஜ்யசபாவில் பா.ஜ., - எம்.பி.,க்கள் பலத்தை அதிகரிக்கும் வகையில், இந்த வெற்றி அமைய வேண்டும் என்றும், கட்சியினருக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.


வெற்றி நிச்சயம்நான்கு மாநில தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெறுவது நிச்சயம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். அவர் கூறியதாவது:பிரதமர் மோடி மீதும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதும், மக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர். லோக்சபா தேர்தல் முடிவுகள் போலவே, இந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகளும் அமையும்.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை, பல தரப்பு மக்களும் வரவேற்கின்றனர். இந்த நடவடிக்கை, நான்கு மாநிலங்களிலும், பா.ஜ.,வுக்கு, 'ஜாக்பாட்'டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.ஒரு குடும்பத்தையே நம்பியுள்ள காங்கிரசால், பா.ஜ.,வுக்கு கொஞ்சமும் சவால் கொடுக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN - Mamallpuram ,இந்தியா
25-ஆக-201921:51:54 IST Report Abuse
INDIAN EVM மெசின் இருக்கும் வரையில் உங்களுக்கு 100 சதவீதம் வெற்றி தான். இ‌னி மக்களின் விரும்பும் ஆட்சி யாரு‌ம் அமை‌க்க முடியாது. இ‌னி தேர்தல் என்ற பெயரால் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டாம். இ‌னி எத்தனை ஆண்டுகள் வேண்டு மோ ஆட்சி செய்யுங்கள்.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25-ஆக-201920:38:39 IST Report Abuse
Allah Daniel EVM மெஷினை, குறை கூறும் பகுத்தறிவு ‘பம்புசெட்டுகளே’...அப்படி பார்த்தால் EVM மெஷினை வச்சு வெற்றிபெற்ற DMK வின் 38 MPயும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்..செய்வார்களா...உனக்கு வந்தால் ‘ரத்தம்’ அடுத்தவனுக்கு வந்தால் ‘தக்காளி சட்னி’யா...இப்படி உளறி உளறி தானே ‘காமராஜரை’ தோக்கடிச்சீங்க, ..
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
25-ஆக-201917:42:28 IST Report Abuse
J.Isaac பேராசை வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X