பொது செய்தி

தமிழ்நாடு

சங்கிலித் தொடர் மேலாண்மை திட்டம்: இரண்டு மாதங்களில் செயல்படுத்த தீவிரம்

Added : ஆக 24, 2019
Advertisement
 சங்கிலித் தொடர் மேலாண்மை திட்டம்: இரண்டு மாதங்களில் செயல்படுத்த தீவிரம்

ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், இன்னும் இரண்டு மாதங்களில், வினியோக சங்கிலித் தொடர் மேலாண்மை திட்டத்தை துவங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. 57 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல், இரண்டு பருவங்களாக, தக்காளி, கத்தரி, புடலை உள்பட பலவகை காய்கறிகளை, 450 ஏக்கருக்கும்; 380 ஏக்கருக்கு வாழையும் சாகுபடி செய்யப்படுகிறது.விவசாயிகள், இடைத்தரகர்களின் மூலம் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். இதனால், நஷ்டம் ஏற்படுகிறது. இடைத்தரகர்களை தவிர்த்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறையினர், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், 'வினியோக சங்கிலித் தொடர் மேலாண்மை' திட்டத்தை துவங்கினர்.திட்டத்தில், பத்து கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இப்பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் காய்கறிகளை சேகரித்து, ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்து, ஏலம் நடத்தி நேரடியாக விற்பனை செய்ய திட்டமிட்டனர். மேலும், காய்கறிகளை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்ற திட்டமிட்டனர்.இதற்காக, கிடங்கு, அலுவலகம், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு நிலையம், ஐந்து கடைகள், குளிர்சாதன அறை உள்ளிட்ட கட்டடங்கள் கட்டும் பணிகள், 2017 நவ., மாதம் துவங்கியது. மொத்தம், 4.60 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கட்டுமான பணிகள் கடந்த, ஆறு மாதத்துக்கு முன் முடிந்தது.இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் விவசாயிகளுடன் கலந்து பேசி, திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தனர். நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இத்திட்டத்தை டெண்டர் மூலம் வழங்க முடிவெடுத்தனர்.குழுக்கள் மூலம், தென்னையில் இருந்து தயாராகும் நீரா, இளநீரை பாட்டிலில் அடைத்து, சந்தையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். விரைவில் திட்டத்தை செயல்படுத்த, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். தாமதம் ஏற்படுத்தாமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண் அலுவலர் சூர்யா கூறியதாவது:வரும், 28ம் தேதி வரை, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் 'டெண்டர்' பதிவு செய்வதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
பதிவு செய்வது நிறைவடைந்ததும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தேர்வு செய்யப்படும். அவர்கள் மூலம், 'வினியோக சங்கிலித் தொடர் மேலாண்மை திட்டம்' செயல்படுத்தப்படும்.தென்னையில் நீரா, இளநீர், பாலில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும், இரண்டு மாதங்களில் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X