ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர்ந்த விருது பிரதமர் மோடிக்கு கவுரவம்

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (7)
Advertisement
மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கவுரவம்

அபுதாபி: பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் வகையில், ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான, 'ஆர்டர் ஆப் சயீத்' விருது, நேற்று அவருக்கு வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து நாள் அரசு முறை பயணமாக, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்து, நேற்று, மத்திய கிழக்கு நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு,பிரதமர் மோடி வந்தார்.இங்கு அவருக்கு, ஐக்கிய அரசு எமிரேட்சின் மிக உயர்ந்த விருதான, 'ஆர்டர் ஆப் சயீத்' என்ற விருது வழங்கப்பட்டது.
இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான உறவு பலப்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்கியதற்காக, இந்த விருது, மோடிக்கு வழங்கப்பட்டதாக, அந்த நாட்டு அரசு தெரிவித்தது.நேற்று நடந்த விழாவில், ஐக்கிய அரபு எமிரேட்சின் பட்டத்து இளவரசர், முகமது பின் சயீத், இந்த விருதை, பிரதமர் மோடிக்கு வழங்கினார்.ஏற்கனவே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரிட்டன் ராணி எலிசபெத், சீன அதிபர் ஜி ஜிங்பின் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுஉள்ளது.

இது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கிய இந்த விருதை, பணிவுடன் ஏற்கிறேன்; இது, தனிப்பட்ட நபருக்கு கிடைத்த விருதல்ல.'இந்தியாவின் கலாசாரத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் கிடைத்த விருது. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்' என, தெரிவித்து உள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்சின் தந்தை என அழைக்கப்படும், சேக் சயீது பில் சுல்தான் அல் நஹ்யான் நினைவாக, 'ஆர்டர் ஆப் சயீத்' விருது, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.


'ரூபே கார்டு' திட்டம்ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் நேற்று நடந்த மற்றொரு நிகழ்ச்சியில், 'ரூபே கார்டு' திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதன் மூலம், மத்திய கிழக்கு நாடுகளில், ரூபே கார்டு திட்டத்தை செயல்படுத்திய முதல் நாடாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உருவெடுத்துள்ளது.


முக்கிய பேச்சு


பிரதமர் மோடி, தன் சுற்றுப் பயணத்தின் ஒரு அங்கமாக, ஐக்கிய அரபு எமிரேட்சின் பட்டத்து இளவரசர், ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யாமுடன், நேற்று, இரு தரப்பு உறவு குறித்து பேச்சுநடத்தினார்.அப்போது, பிரதமர் மோடியை, ''என் சகோதரரை வரவேற்கிறேன். அவரது இரண்டாவது தாய் வீடு, இந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,'' என, மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.பிரதமர் மோடி, தன் சுற்றுப் பயணத்தின் போது, ஐக்கிய அரபு எமிரேட்சின், அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கும் உள்ள உறவு, எப்போதும் நீடித்திருக்கும். இந்த உறவானது, வெறும், வர்த்தகமாக மட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த செயல்திட்டத்துக்கான உறவாக விளங்குகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த ஐந்தாண்டுகளில், 350 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாக உயர வேண்டும் என்பதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை நோக்கி, திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அது போல, முதலீட்டையும், பல லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.இதற்காக, உள்நாட்டு முதலீடுகளையும், வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்ப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவின் பொருளாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.இந்தியாவில், புதுப்பிக்கதக்க எரிசக்தி, உணவு, துறைமுகம், விமான நிலையம், ராணுவ சாதானங்கள் தயாரிப்பு ஆகியவற்றில், அதிக அளவில் முதலீடு செய்யலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.நேற்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்த, பிரதமர் மோடி, பக்ரைன் சென்றடைந்தார்.


காஷ்மீரில் முதலீடு: மோடி அழைப்பு


ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், வெளிநாடு வாழ்இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில், மோடி பேசியதாவது:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், வெளிநாடு வாழ் இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நிலையான அரசியல் தன்மை, திட்டமிட்ட செயல்பாடுகள் ஆகியவை, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு, மிகச் சாதகமான சூழல்களாக உள்ளன.அரசின் திட்டங்கள் அனைத்துமே, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, உள்நாட்டிலேயே பொருட்கள் தயாரிப்பது ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன.இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சாதகமாக உள்ள சூழலை, தொழில் அதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஜம்மு - காஷ்மீரில், தற்போது நல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தொழில் அதிபர்கள், அங்கு, அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும்.பல்வேறு காரணங்களால், அந்த மாநிலம், முதலீடு விஷயத்தில், பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்தது.இப்போது, அந்த தடை நீங்கி விட்டது. தொழில் அதிபர்கள் தாரளமாக முதலீடு செய்ய வேண்டும். ஜம்மு - காஷ்மீரில், பல முக்கிய திட்டங்களை, அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம், அங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், காஷ்மீர் முக்கிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜம்மு - காஷ்மீரும், லடாக்கும், உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களாக உள்ளன.

இதுவரை, நாட்டின் மற்ற மாநிலங்களில் இருந்து, ஜம்மு - காஷ்மீர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால், அங்குள்ள இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர். இதன் காரணமாகவே, ஜம்மு - காஷ்மீரில், சில மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டன.இது, எங்கள் நாட்டின் உள் விவகாரம் சம்பந்தப்பட்டது. முழுமையான ஜனநாயகம், வெளிப்படையான அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தியாவின் இந்த செயல்பாட்டை புரிந்து, ஆதரவு அளித்த, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால், இந்தியா, பல ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டது. பயங்கரவாதமும், பழமைவாதமும், ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.இங்கு பணியாற்றும் பல லட்சம் இந்தியர்கள், தங்கள் இரண்டாவது தாய் வீடாக, ஐக்கிய அரபு எமிரேட்சை தான் கருதுகின்றனர். சமூக நல்லிணக்கத்துக்காக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
25-ஆக-201920:30:58 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி கோல்ட் செயின் நல்லாயிருக்கு
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
25-ஆக-201911:12:00 IST Report Abuse
SaiBaba செந்தில் சிகாமணி அவர்களே, நீங்கள் என்ன தான் வரிந்து எழுதினாலும், தமிழகத்தில் உள்ள கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் மோடியை சபிக்கிறார்கள். மத மாற்றத் தடையை அவர்களால் தாங்க முடியவில்லை. மேலும் நாட்டை விட்டு ஓடி வெளிநாட்டில் குடியுரிமை பெற முனைப்புடன் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
25-ஆக-201918:43:08 IST Report Abuse
Dr.T.SenthilsigamaniSaiBaba - Chennai,இந்தியா நன்றி நன்றி மதம் மாறிய ஹிந்துக்கள் மனம் திருந்தினால் போதும் .மதம் திரும்ப வேண்டாம் .மோடிஜியை பற்றி அவர்களும் புரிந்து கொள்ளும் நல்ல காலம் வரும் வரும் இது உறுதி...
Rate this:
Share this comment
Cancel
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
25-ஆக-201907:57:43 IST Report Abuse
Dr.T.Senthilsigamani ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர்ந்த விருது பிரதமர் மோடிக்கு கவுரவம்.மிக நல்ல செய்தி . ஒருவரை நல்லவர் என பாராட்டும் போது மனித மனதிற்கு அப்படியானால் கெட்டவர் யார் என்ற கேள்வி எழுவது இயல்பே. அதற்காகத்தான் இந்த உதாரணம் தமிழகத்தின் கடந்த ஐம்பது ஆண்டு கால வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாட்கள் உண்டு .அது குண்டு வெடிப்புகள் ,மத ,ஜாதி பூசல்கள் ,வஞ்சம் வளர்த்து பழிக்கு பழி கொலைகள் ,சமூக நீதி மறுக்கும் ஆணவ கொலைகள் மற்றும் அரசியல் கொலைகள் என பட்டியல் நீளும்.அதில் அரசியல் கொலை என்றாலே அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் படுகொலை ஞாபகம் தான் முதலில் வரும்.அந்த நிகழ்வு - 1971-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் என விருது கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதனை எதிர்த்ததற்காக பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் பல்கலைகழக வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். பின்னும் அவர் தந்தையை மிரட்டி அது அவரது மகன் அல்ல என மிரட்டி வாங்கினர் .இது யாவும் மறைந்த கருணாநிதியின் ஏவலால் நடந்தது.- ஆனால் இப்போது மோடிஜி வாங்கும் உலகளாவிய உயரிய விருதுகள் யாவும் விலைக்கு வாங்கியதுவும் இல்லை .மிரட்டி வாங்கியதுவும் இல்லை.அவரின் நல்லாட்சியையும் ,நிர்வாக திறமையையும் ,இயற்றி வரும் தொலைநோக்கு திட்டங்களையும் ,ஊழலற்ற சமத்துவ சர்வ சமய சுதந்திர ஆட்சியையும் ,சீர் தூக்கி மற்றவர்கள் வழங்குவது தான் இத்தகைய விருதுகள் .கடந்த ஐந்து வருடங்களில் ஏராளமான மக்கள் நல திட்டங்களை அறிமுகம் செய்து ஊழல் இல்லாத ஆட்சியை தந்தார் மோடிஜி. சிறுபான்மையினரை கனிவுடன் ,பரிவுடன் பெரும்பான்மையினருக்கு சமமாக நடத்தினார் மோடிஜி .அதனால் தான் இந்திய அளவில் /சர்வதேச அளவில் உயரிய அங்கீகாரங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.அதில் முதன்மை விருதுகள் இதோ தினமலர் வாசகர்களுக்காக A)கிருஸ்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள ரஷ்யாவின் உயரிய விருதான புனித ஆண்ட்ரு விருது மோடிஜிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் போன வருடம் வழங்கினார் ..B)அது போல முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் மிகச்சிறந்த குடிமகனுக்கான மிக உயர்ந்த விருதான, 'ஆர்டர் ஆப் சயீத்'ஜாயத்' விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஷேக் கலீபா பின் ஜாயத் அல் நஹ்யான் நேற்று வழங்கினார் . C) ஏற்கனவே போன வருடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தென் கொரியாவின் உயரிய விருதான சியோல் அமைதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. D) பிரிட்டனின் தலைநகர் லண்டனில் செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால் இதழ் 2019-ம் ஆண்டின் உலகின் மிகவும் வாய்ந்த நபர் யார் என்பது குறித்து வாசகர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் இந்திய பிரதமர் மோடி முதலிடம் - E).நேற்று முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாட்டின் மன்னர் - 'பஹரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலிபா மோடியை கவுரவித்து மறுமலர்ச்சியின் மன்னர் ஹமாத் எனப்படும் ஆணையை இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கினார். F)போன வார செய்தி மக்களின் மன நிலை என்ற தலைப்பில் இந்தியா டுடே குரூப் சார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் - நாட்டின் முதல் பிரதமர் நேரு முதல் இப்போது வரை பிரதமராக பதவி வகித்தவர்களில் நரேந்திர மோடியே மிக சிறந்த பிரதமர் என்று மக்கள் தெரிவித்துள்ளனர் .G) இந்த வருடம் ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த, 'யு கவ்' என்ற, ஆய்வு நிறுவனம், நடத்திய கருத்து கணிப்பில் , சர்வதேச அளவிலும், ஒவ்வொரு நாடுகளிலும், அதிகம் விரும்பப்படும், போற்றப் படும், வி.ஐ.பி.,க் களில் இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் வி.ஐ.பி.,க்களில் மோடிக்கு முதலிடம். இத்தகைய விருதுகள் அனைத்தும் மோடிஜி ஆற்றிவரும் அயராத மக்கள் நலப்பணிகளுக்கு ,அயல் நாட்டு நல்லுறவிற்கு ,அந்நிய நாடுகள் கொடுத்த நல் அங்கீகாரம் என கொள்ளலாம்..உலகின் மற்ற எந்த நாட்டிலும் விட இந்தியாவில் தான் சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு நிகராக நடத்தப்படுகின்றனர் .இஸ்லாமிய அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதி என அழகு பார்த்தது வாஜிபாய் பிஜேபி அரசு .தலித் ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதி என அழகு பார்த்தது மோடிஜி பிஜேபி அரசு.மோடிஜி ஆட்சியில் சிறுபான்மையினர் சுதந்திரமாகவும் ,மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர் .எந்த பாதிப்பும் இல்லை .பசுக்குண்டர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று அதனால் தான் சூளுரைத்தார் .இந்தியாவில் பிஜேபி /மோடிஜி குறித்து போலிமதச்சார்பின்மை வாதம் பேசி சிறுபான்மையினரை வெறுமையிலும் ,பதற்றத்திலும்,அச்சத்திலும் ஆழ்த்தி அவர்களின் ஓட்டுக்களை பெறுவதில் மதசார்பின்மை கட்சிகள் முன்னணியில் உள்ளன.ஆனால் மோடிஜி ஆட்சியில் யாருக்கும் பாதிப்பில்லை என்பதனையும் ,மோடிஜி மதவாதி அல்ல என்பதனையும் உதாரணங்களுடன் சற்றே விளக்குகிறேன் - முதலாவதாக ,கடந்த ஐந்து வருடங்களில் மத்திய பிஜேபி அரசினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்கள்,கிருஸ்துவர்கள் நடத்தும் பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் ஏதாவது உண்டா ? இல்லையென்றால் சிறுபான்மை கல்விநிறுவனங்களில் மதவாத பிஜேபி அரசால் அட்மிஷன் குறைந்ததாக செய்திகள் உண்டா ? கிடையவே கிடையாது .முஸ்லிம்கள் ,கிருஸ்துவர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் /வர்த்தக நிறுவனங்கள் எதற்காவது பிஜேபியினால் பாதிப்பு உண்டா ? மேலும் கடந்த ஐந்து வருடங்களில் மத்திய அரசின் போட்டித்தேர்வுகள் எழுதி ,தேர்வாகி ஆனால் பதவி மறுக்கப்பட்ட சிறுபான்மையினர் உண்டா ? அல்லது மத்திய அரசில் பணியாற்றும் சிறுபான்மையினருக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதா ? பதவி பறிக்கப்பட்டதா ? இல்லையே .கடந்த ஐந்து ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் ஒரு சிறுபான்மையினராவது தாய்மதம் திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட்டனரா ? இல்லையே போன மாத செய்தி -பாகிஸ்தானில் ஹிந்து சிறுமியர் கட்டாய மதமாற்றம் மற்றும் - பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் குறைந்தது இருபத்துஐந்து ஹிந்துக்கள் முஸ்லிம்களாக வலுக்கட்டாயமாக மாற்றப்படுகின்றனர் இந்தியாவில் இப்படி ஒரு நிகழ்வு சிறுபான்மையினருக்கு கடந்த ஐந்து ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் நிகழ்ந்ததே இல்லை.மோடிஜி ஆட்சியில் மதக்கலவரங்கள் நடைபெறவே இல்லை .இதனை மதம் மாறிய ஹிந்துக்களும் ,மதம் மாறாத ஹிந்துக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.போலிமதச்சார்பின்மை பேசும் கருப்பு தாலிபான் ,சிவப்பு தாலிபான் ,காங்கிரஸ் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் நபராக மோடிஜி உயர்ந்திருக்கிறார் .இத்தகைய விருதுகள் / கவுரவம் பிரதமர் மோடிஜியின் மணிமகுடத்தில் மேலும் வைரக்கற்கள் என எழும்பி பிரகாசிக்கட்டும்.மத துவேஷத்தினால்/ மத மாச்சரியங்களால் / மத ஒவ்வாமை கருத்துக்களால் / மத மாறுபாடுகளால் / மத வேறுபாடுகளால் / மத அதிதீவிரவாத கருத்துக்களால் / மத காழ்ப்புணர்ச்சியால்/மத வெறுப்பினால் மோடிஜியை குறைகூறுபவர்கள் தங்களின் நிலைப்பாட்டை சீர்தூக்கி நன்னெறி நின்றிடுக .இத்தகைய உயரிய விருதுகளை / கவுரவம் /அங்கீகாரம் பெற்றிடும் பிரதமர் மோடிஜியை வாழ்த்தி வரவேற்க்கிறேன். படைப்பு தெய்வங்கள் புவிக்கு தலைமை பொறுப்பை ஏற்கும் ஒருவனுக்கு அவன் தனது முழு ஆற்றலையும்/உச்ச சக்தியையும்/ஆக்கம் தரு திறமையையும் /சலிப்பில்லாத உழைப்பையும் /இடைவிடாத முயற்சியையும் /சோர்வில்லாத ஊக்கத்தையும் / தொலைநோக்கு பார்வையையும் வெளிப்படுத்தும் அளவுக்கு மிக மிக கடுமையான சோதனைகளை அளிக்கிறது. தரக்குறைவான விமர்ச்சனங்கள் /கீழான பேச்சுக்கள் /பொய்யான ஆதாரங்கள்/ அநீதியான இளிவரல்கள்கள் /அர்த்தமற்ற குற்றசாட்டுகள்/ பாரபட்சமான பார்வைகள்/காரணமற்ற கண்டனங்கள் என்ற படைக்கலன்களை ஏந்தியவர்களிடம் தீரமாக போரிட்டு வெல்பவனையே புவிக்கு தலைமையேற்க விண்ணுறை தெய்வங்கள் ஆணைகளை இடுகின்றன .ஆம் அத்தகைய ஆணைகளை செவி மடுத்து தலை மேல் கொள்பவர் மோடிஜி அவர்கள் தான் .ஆம் கடந்த நாடாளுமன்ற தேர்தல் மோடிஜிக்கு ஒரு சோதனை தான் .ஆனாலும் மக்களின் அமோக ஆதரவை பெற்று , இந்தியாவிற்கு பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார் .ஆனாலும் இத்தகைய விருது/கவுரவம் செய்தியிலும் கூட குற்றம் /குறை சொல்ல ஒரு திரள் நிரையில் நிற்கும் - அது தான் கொடுமை . மோடிஜியை விமரிசித்து பேசுவது என்பது வேறு .மோடிஜியின்/ மோடிஜியின் அரசு செயல்கள் எல்லாவற்றையும் குறைகூறுவது என்பது வேறு .மோடிஜி பற்றிய செய்திகள் என்றாலே பிறழ் முரண் வாதம் செய்யும் கூட்டத்தினர் மோடிஜி ஆட்சியில் நடந்த நல்ல நல்ல அம்சங்கள் பற்றி எதுவும் கூறாமல் மௌனச்சாமியாகி விடுவார்கள் .பிரதமர் மோடிஜி , அவர் குறித்து ஊடகங்களில் விதைக்கும் விஷம பிரசாரங்களால் /விஷ (நஞ்சு ) எண்ணங்களால் தவறாக சித்தரிக்கப்படுகிறார் . மோடிஜி குறித்த எந்த செய்திகள் என்றாலும் ஒளிதரும் சூரியனிலும் கரும் புள்ளிகள் உள்ளது என வாதிடும் கூட்டம் கிண்டல்கள் /ஏளனங்கள் /ஏச்சுக்கள் /இளிவரல்கள் /நக்கல்கள் /நையாண்டிகள் /அகடியம்/ பொல்லாங்கு/ பகடிகள் / எள்ளல்கள் /எகத்தாளங்கள் என வஞ்சக உரை சொல்லும் பொருளின்மை வாதங்களால் மோடிஜியை வசை மழை பொழிவர். அறியாமையின் முடிவிலி உச்சம் கண்டு உன்மத்தம் அடைந்தவர்கள் கூட்டம் அது ..ஆனால் மோடிஜி இத்தகைய சமகாலச் சிறுமைகளை ,தன்னிகரற்ற முற்றொருமை குணங்களால் கடந்து செல்வார் . அகண்ட தொல் பாரதத்தில் ஜனகன் ,திலீபன் ,புரு ,யயாதி ,ஹஸ்தி,பரதர் ,ஸ்ரீராமர் ,குரு,யுதிஷ்ட்டிரர் ஆகிய பேரரசர்கள் ஒரு அரச துறவியாக ,ராஜ யோகியாக ,கர்ம ஞானியாக, ஆன்மிக குருவாக , இலட்சிய மன்னராக ,ஞான வேந்தராக , பிரம்ம ரிஷியாக ,உதாரண புருஷராக ,அறக்காவலராக , உத்தம சக்கரவர்த்தியென ஒளி திகழும் எண்ணங்கள் வழி நடத்த , குல மூத்தோர் ,நீத்தோர் ,வான் ஏகியோர் ,விண்ணுறை தெய்வங்கள்.குல மூதாதைகள் சாட்சியாக நல்லாட்சி புரிந்தனர் .அதனால் தான் அவர்கள் சொல் இன்றும் பாரதத்தை வழி நடத்துகிறது. ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தும் இந்தியா மதசார்பின்மை நாடாக திகழ்வதே அதற்க்கு முதன்மை சான்று. நூலாய்ந்து, ,சொல்லாய்ந்து ,அறமாய்ந்து, நெறியாய்ந்து ,மரபாய்ந்து ,கோளாய்ந்து, கொடியாய்ந்து, சீராய்ந்து ,சிறப்பாய்ந்து .மக்கள் நலனை கருத்தில் கொண்டவர்களின் பொற்கால ஆட்சியை கண்டது பாரதம்.இன்றைக்கு அந்நிய மதம் தழுவி ஹிந்து சனா தன தர்மங்களை விட்டு விலகி நிற்பவர்களின் மூதாதையர்கள் கூட மேற்கணட அறநெறி வழுவா அரசர்களின் செங்கோலில் நல்லறம் திகழ வாழ்ந்தது வரலாறு. அதனை யாரும் மறுக்கவோ /மறைக்கவோ முடியாது .அத்தகைய பேரரசர்களின் வழிகளை தடம் கண்டு ,அதன் பாதையில் அகண்ட பாரதத்தின் வளர்ச்சியை அழியா பெருங்கனவாக கொண்டுழைப்பவர் மோடிஜி..ஆதலால் தான் மக்கள் நலத்திட்டங்கள் ,பயங்கரவாத எதிர்ப்பு என பிரதமர் சாதனை பயணம் நிகழ்த்துகிறார் . பிரதமர் மோடிஜியை .கவிஞர் வைர முத்து வரிகளில் சொல்வதென்றால் - எதிர்ப்பை சந்திக்காத எதையும் வரலாறு வரவு வைத்துக் கொள்ளுவதில்லை - இலட்சியவாதிகளின் வாழ்க்கை ஒரு நாள் பந்தயமல்ல - வெற்றி தோல்விகளை மாலைக்குள் அறிவதற்கு .அது யுகங்களின் மீது எட்டு வைத்து நடக்கும் பயணம் - ஆம் சத்திய வாக்கு டீ வித்தவர், மோடி மஸ்தான் ,உலகம் சுற்றும் வாலிபர், மதவாதி என கூட்டங்கள் வசை பாடினாலும் மோடி சுனாமியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது . இந்தியாவில் மோடியுகம் நடக்கிறது ..ஆம் சிம்மங்களை ஏரில் பூட்டுவதில்லை, வேங்கைகளை மந்தையென மேய்ப்பதுமில்லை .மோடிக்கு நிகரானோர் யாரும் இல்லை .போட்டிகள் இல்லாத களம் மோடியின் களம் ..நான்கு வகை தொல் வேதங்கள் தழைத்த ஆன்மிகம் செழித்த நல்நாடு நம் பாரததேசம் - அந்த தேசத்தின் வளர்ச்சியை உயிர் மூச்சாக கொண்டுழைக்கும் பெருவிழைவுடையவனாய் . பாரத நேசனாய் , மோடிஜி ஆற்றும் செம்மை பணிகள் அருமையிலும் அருமை .அதன் பெருமை அறியாதோர் சிறுமை கொண்ட கருமை மனத்தினர் என மேன்மை இல்லாதார் ஆவார் . இம்மையிலும் மறுமையிலும் நன்மை ஒன்றையே நாடும் பன்மை சான்றோர் விரும்பும் வேற்றுமையிலும் ஒருமை கொண்டாடும் புதுபொலிவு வன்மை - வலிவு கொண்ட வல்லரசு பாரதம் விரைவில் அமைய ,அயராது பாடுபடும் மோடிஜிக்கு என்றும் இறைவன் துணையிருக்கட்டும். இந்தியா வல்லரசாகும் வரை மோடிஜியின் சாதனை பயணம் தொடரும் .கடேசியாக போலிமதச்சார்பின்மை வாதிகளின் நோக்கில் , மோடிஜியை பாராட்டாமல் ,அவரின் தனிப்பட்ட வாழ்வை குறி வைத்து பேசுவதை பார்த்தால் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா என்ற பழைய தமிழ் பாடல் வரிகள் தான் ஞாபகம் வருகிறது .அது 1. இந்தியாவில் கல்யாணம் செய்யாமல் அரசியலில் மக்கள் தொண்டு செய்தால் -நைஷ்டிக பிரம்மச்சாரி கர்ம வீரர் காமராஜர் போல இருந்தால் - அவருக்கு பொண்ணு கொடுப்பாரில்லை - அவருக்கு மனைவி ,துணைவி இணைவி உண்டு என பொய் கதை கட்டி விடுவது ..அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களையும் இதையே போன்று சொன்னவர்களும் உண்டு .2.ஒரு வேளை கல்யாணம் செய்து குழந்தை பேறு வாய்க்காமல் இருந்தால் எம்ஜியார் போன்று வாழ்ந்தால் அவரை மலடன், என இளிவரல் செய்வது ஒரு கீழ்மையான கூட்டம் 3.அப்படியில்லாமல் ,கல்யாணம் செய்து மனைவியுடன் மன ஸ்தாபத்தில் பிரிந்திருந்தால்,நான் பிறந்த நாடு தான் எனது குடும்பம் என பெற்ற தாயையும் பிரிந்திருந்தால் பிரதமர் மோடி போன்று - அதனையும் இளிவரலாக விமரிசித்து பேசுவது மற்றோரு ரகம் ..4.கடேசியாக ஒன்றுக்கு இரண்டு /மூன்று கல்யாணங்கள் செய்து மனைவி ,இணைவி ,மற்றும் துணைவி என சுற்றம் சூழ திராவிட ,கடவுள் கிருபையால் ,குழந்தை பேறு வாய்க்கப்பட்டு ,மகன்கள் /மகள் என்று உறவு முறைகள் சூழ ,1000 தலை முறைக்கு சொத்து சேர்த்து நீண்ட ஆயுள் கொடை பெற்று வாழ்ந்து மறைந்தாலும் கூட ,அவர் மூத்த மகன் ஒரு மொடா குடிகாரர் ,மற்றொருவர் பெண் பித்தர் ,இன்னொருவர் ரௌடிசம் செய்பவர்,ஒரே மகள் கூட முதல் கணவனை விவாகரத்து செய்து இரண்டாவது கணவருடன் வாழ்பவர் ,சிறைவாசம் சென்றவர் என வாரிசுகளை வைத்து அந்த மனிதரை திட்டுவது/கரித்து கொட்டுவது கடேசி ரகம் .எந்த அரசியல்வாதிகளும் இத்தகைய முரண் விமர்ச்சனங்களுக்கு விலக்கு அல்ல .ஆதலால் இத்தகைய முரண் வாதங்களை ஒதுக்கிவைத்து மோடிஜியின் கரங்களை பலப்படுத்துவோம். இது போன்ற விருதுகள் பல பெற்று மோடிஜி சிறந்த நல்லாட்சி தந்திட அவரை வாழ்த்துவோம்.ஆம் இது போன்ற விருதுகள் பல பெற்று மோடிஜி சிறந்த நல்லாட்சி தந்திட அவரை வாழ்த்துவோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X