அரசியல் செய்தி

தமிழ்நாடு

துரைமுருகனுடன் பன்னீர் மகன் சந்திப்பு

Added : ஆக 24, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 துரைமுருகனுடன் பன்னீர் மகன் சந்திப்பு

தி.மு.க., பொருளாளர், துரைமுருகனை, துணை முதல்வர், பன்னீர்செல்வத்தின் மகனும், அ.தி.மு.க., - எம்.பி.,யுமான, ரவீந்திரநாத் குமார் சந்தித்து பேசியது, அக்கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா இருந்தபோது, அ.தி.மு.க.,வை சேர்ந்தோர், தி.மு.க.,வினருடன் நேரடியாக, எந்த விதத்திலும் தொடர்பு வைத்ததில்லை. தி.மு.க., எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டனர்.ஏதேனும் சுப நிகழ்ச்சிகளில், தி.மு.க.,வினரை சந்திக்க நேரிட்டாலும், பாராமுகமாக செல்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர்.மாறிவிட்டதுஜெயலலிதா மறைவுக்கு பின், அனைத்தும் மாறி விட்டன. சட்டசபையில், இரு கட்சி பிரதிநிதிகளும் ஒட்டி உறவாடுகின்றனர்.அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க.,வினருடன் நட்பு பாராட்டினாலும், அக்கட்சியினர் இன்னமும் விரோத மனப்பான்மையுடன் உள்ளனர். தி.மு.க., எதிர்ப்பு நிலையிலிருந்து மாறக் கூடாது என்பது, அவர்களின் கருத்தாக உள்ளது.இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவரும், தி.மு.க., பொருளாளருமான துரைமுருகன், பொது கணக்கு குழு தலைவராக உள்ளார்.
சமீபத்தில், இக்குழுவின் கூட்டம், தேனியில் நடந்தது.கூட்டத்திற்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வத்தின் மகனும், அ.தி.மு.க., - எம்.பி.,யுமான ரவீந்திரநாத் குமார் சென்றார்.
சால்வை
அங்கு, துரைமுருகனுக்கு, அவர் சால்வை அணிவித்தார். இந்த படமும், துரைமுருகன், தி.மு.க., - எம்.எல்.ஏ., - டி.ஆர்.பி.ராஜா ஆகியோருடன், ரவீந்திரநாத் தனியாக பேசும் புகைப்படமும், சமூக வலைதளங்களில் வெளியாகின. இது, அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சட்டசபையில், 'ஜெ.,வின் சேலையை பிடித்து இழுத்தவர், துரைமுருகன். அவருக்கு, சால்வை அணிவித்து பேசலாமா' என, கேள்வி எழுப்பி உள்ளனர்.அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி, முன்னாள் மாநில செயலர், சுவாமிநாதன், அப்படங்களை, சமூகவலைதளத்தில் வெளியிட்டு, 'என்னமோ நடக்குது; மர்மமாய் இருக்குது; ஒண்ணுமே புரியலை உலகத்திலே; இதெல்லாம் அரசியலில் சகஜமோ' என, குறிப்பிட்டிருந்தார்.
ஜெ., இருந்திருந்தால், இது போன்று நடக்குமா என்ற கேள்வியை, கட்சியினர் பலரும் எழுப்பி உள்ளனர். இது, கட்சியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோ, 'ஆய்வுக்கு வந்த குழுவினரை சந்தித்தபோது, மரியாதை நிமித்தமாக, எம்.பி., சால்வை அணிவித்தார். இதை, தேவையின்றி அரசியலாக்குகின்றனர்' என்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-ஆக-201919:11:04 IST Report Abuse
Lion Drsekar இதில் இருந்து ஒன்றை இந்த குடும்பங்களுக்காக தன உயிரை துச்சமென நினைத்து வாழும் ஒரு வேளை சோற்றுக்கும் வழி இல்லாத இவர்களின் பிராந்தி, ப்ரியாணிக்காக வாழும் பாவப்பட்டார்கள் நம் முதுகில் கால்வைத்து படியேறுகிறார்கள் என்பதை உணர்ந்து , நமக்கு நாமே என்று முடிவு எடுத்தால் மட்டுமே எல்லாமே நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
26-ஆக-201915:45:33 IST Report Abuse
muthu Rajendran அரசியல் மாச்சரியங்களை தாண்டி இரு கட்சியினர் சந்திப்பது ஒரு ஆரோக்கியமான அரசியல் . வடஇந்தியாவில் இது போன்று நட்பு கடைபிடிக்கப்படுகிறது. இங்கும் அது போல் வருவது நல்லது தான்
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
26-ஆக-201913:14:46 IST Report Abuse
narayanan iyer இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் இணைந்து பணியாற்றுவது தவறில்லை .பணி மக்களுக்காக என்னும் போது இதுபோன்ற சந்திப்புகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள் .ஊக்குவிக்க வேண்டும் . நாம் என்னதான் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்க பட்டவராக இருந்தாலும் டெல்லியில் அரசுடன் எதிர்கட்சித்தலைவர்கள் பேசுகிறார்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X