காஷ்மீரில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு 'நோ என்ட்ரி!'

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (29+ 82)
Advertisement
காஷ்மீர், எதிர்க்கட்சி தலைவர், நோ என்ட்ரி, ஸ்ரீநகர், ராகுல், சத்யபால் மாலிக்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை பார்வையிடவும் அங்குள்ள மக்களை சந்தித்து பேசவும் காங். முன்னாள் தலைவர் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் நேற்று ஸ்ரீநகருக்கு விமானத்தில் சென்றனர். ஆனால் விமான நிலையத்தை விட்டு வெளியே வர அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த விமானத்திலேயே டில்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 'ஆதாயம் தேடவே ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் காஷ்மீருக்கு வந்தனர்' என மாநில கவர்னர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டினார்.
கடந்த 5ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முன் ஆக. 4ம் தேதியன்றே காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களைத் தவிர 400-க்கும் மேற்பட்ட தலைவர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இப்போது அங்கு நிலைமை சீராகி வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தடையுத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.


திருப்பி அனுப்பப்பட்டனர்.


மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லுாரிகள் அரசு அலுவலகங்கள் செயல்பட துவங்கியுள்ளன. எனினும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும் இந்த நடவடிக்கைக்கு காங்., தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இதற்கிடையில் ஜம்மு - காஷ்மீரின் நிலைமையை ஆய்வு செய்யவும் அங்குள்ள மக்களை சந்தித்து பேசவும் கடந்த வாரம் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் டி.ராஜா இருவரும் ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு விமானத்தில் சென்றனர். ஆனால் அவர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டு டில்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதேபோல் காங். மூத்த தலைவரும் ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம்நபி ஆசாத்தும் திருப்பி அனுப்பப்பட்டார்.


ராகுல் பதில்

இந்நிலையில் 'காஷ்மீரில் வந்து நிலைமையை ஆய்வு செய்ய விமானத்தை அனுப்பி வைப்பதாக காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு கவர்னர் சத்யபால் மாலிக் அழைப்பு விடுத்தார்.ஆனால் 'விமானத்தை அனுப்ப தேவையில்லை; எதிர்கட்சி தலைவர்களுடன் நானே வருகிறேன்; ஆனால் மக்களை சந்தித்து பேசுவதில் எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது' என ராகுல் பதில் அளித்தார். 'நிபந்தனைகளை ஏற்க முடியாது' என கூறி ராகுலுக்கு விடுத்த அழைப்பை கவர்னர் திரும்பப் பெற்றார்.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் நிலவரத்தை நேரில் அறியவும் காஷ்மீர் மக்களுடன் உரையாடவும் காங்கிரஸ் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று காலை டில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு விமானத்தில் சென்றனர்.காங். முன்னாள் தலைவர் ராகுல் தலைமையில் சென்ற இந்தக் குழுவில் இந்திய கம்யூ.வின் டி.ராஜா, மார்க்சிஸ்டின் சீதாராம் யெச்சூரி, காங்கிரசை சேர்ந்த குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ராஷ்ட்ரீய ஜனதாதளத்தை சேர்ந்த மனோஜ் ஜா, திரிணமுல் காங்.,கை சேர்ந்த தினேஷ் திரிவேதி, தி.மு.க. வை சேர்ந்த திருச்சி சிவா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இறங்கிய அவர்களுக்கு விமான நிலையத்தை விட்டு வெளியே வர காஷ்மீர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அங்கிருந்தே டில்லிக்கு அவர்கள் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.எதிர்க்கட்சி தலைவர்கள் வருகையால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

முன்னதாக நேற்று காலை ஜம்மு - காஷ்மீரின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவில் 'ஜம்மு -- காஷ்மீர் மக்களை பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அரசியல் தலைவர்களின் திடீர் வருகை காஷ்மீரில் உள்ள அமைதியையும் இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்கும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக டில்லியிலிருந்து புறப்படும் முன் காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில் ''எங்களுக்கும் நாட்டின் மீது பற்றும்அக்கறையும் உள்ளது.


நாங்கள் சட்டத்தை ஒரு போதும் மீற மாட்டோம்.


காஷ்மீர் நிலைமை கவலையளிக்கிறது.நிலைமை அமைதியாக இருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் தலைவர்கள் செல்ல அனுமதி மறுப்பது ஏன்'' என கேட்டார்.

திருப்பி அனுப்பப்பட்டது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ. வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இது பகல் நேர கொள்ளை. நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்றால் மக்களை நாங்கள் சந்திப்பதை அரசு தடுப்பது ஏன்; மத்திய அரசின் இந்த சர்வாதிகாரபோக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என கூறப்பட்டுள்ளது


அரசியல் ஆதாயம்



எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டது பற்றி கவர்னர் சத்யபால் மாலிக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:பார்லிமென்டில் காஷ்மீர் விவகாரம் பற்றி பொய்யான தகவல்களை கூறியதால் தான் நிலைமையை ஆய்வு செய்ய காஷ்மீருக்கு வருமாறு ராகுலுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் இப்போது அவர் மாநிலத்தின் அமைதியை சீர்குலைத்து தான் கூறிய பொய்யை உண்மை என நிருபிக்கவே வருகிறார்.நல்லெண்ணத்துடன் நான் கூப்பிட்டதை அரசியல் ஆதாயம் பெறுவதற்கு அவர் பயன்படுத்துகிறார். இதை அனுமதிக்க முடியாது. சிலர் நாட்டு நலனில் கூட அரசியல் லாபம் அடைய முயற்சிப்பது வேதனை, என்றார்.


கட்டுப்பாடுகள் தளர்வு


வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்ததாலும் பிரிவினைவாதிகள் பேரணி நடத்த திட்டமிட்டிருந்ததாலும் காஷ்மீரின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நேற்று அந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர் ஈடுபட்டிருந்த நிலையில் மக்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வந்தனர். மாநிலத்தில் அலுவலகங்கள் செயல்பட்டன. அதிகாரிகள், ஊழியர்கள் பெரும்பாலோர் பணிக்குவந்திருந்தனர். எனினும் 20வது நாளாக நேற்றும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்தும் குறைந்த அளவிலேயே இருந்தன. எந்த வன்முறை சம்பவமும் நடந்ததாக தகவல் இல்லை.


விடுவிக்க முடிவு

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தியை விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவர்களுடன் மத்திய அரசு மற்றும் காஷ்மீர் நிர்வாக பிரதிநிதிகள் பேசியுள்ளனர். 'மக்களை சந்தித்து பேசும் வகையில் விடுவிக்க தயாராக உள்ளோம். ஆனால் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேச கூடாது' என எச்சரிக்கப் பட்டுள்ளது. ஆனால் தேசிய மாநாட்டு கட்சி இதை மறுத்துள்ளது.

காஷ்மீர் மக்களை சந்தித்து அவர்களுக்கு என்ன தேவை என அறிந்து உதவி செய்யவே நாங்கள் செல்ல எண்ணினோம். ஆனால் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. எங்களுடன் வந்த பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். மாநிலத்தில் நிலைமை சரியில்லை என்பதையே இது காட்டுகிறது.
ராகுல்,
காங். முன்னாள் தலைவர்

Advertisement




வாசகர் கருத்து (29+ 82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramanathan - Ramanathapuram,இந்தியா
25-ஆக-201922:09:06 IST Report Abuse
ramanathan இது பக்காவான அரசியல். இவர்களை செமத்தியான முறையில் கவனித்து அனுப்பி வைத்திருக்க வேண்டும். அடி உதவுவது போல் அண்ணணோ தம்பியோ உதவப்போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
25-ஆக-201920:43:30 IST Report Abuse
konanki நம்ப திருச்சி சிவா திருச்சி மாவட்டத்தில் பாலாறு தேனாறு ஒட விட்டு விட்டார். இப்போ காஷ்மீர் மக்களின் நலத்தை பற்றி கவலைப் படுகிறார். ஒங்க மாநில மக்களின் நன்மைக்காக வேலை செய்யுங்கள். அங்கே நீங்கள் ஒரு ஆணியும் எடுக்க வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக-201919:56:32 IST Report Abuse
Thiagu சூசை நீ அங்கல்லாம் போவாதே, அந்த விஜயகுமார் என்கவுண்டர் ஸ்பெசிலிஸ்ட், அப்புறம் ஜட்டி யோட ஓட விட்ருவாங்க பார்த்துக்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X