சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் 'லஷ்கர்' பயங்கரவாதிகள்?: உளவுத்துறை உஷார் உத்தரவின் பின்னணி

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (30+ 30)
Advertisement
கோவையில் 'லஷ்கர்':உஷார் பின்னணி

கோவை: பாக். ஆதரவு 'லஷ்கர் - இ- தொய்பா' பயங்கரவாதிகள் ஆறு பேர் தமிழகத்தில் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்களின் பின்னணி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த ஏப்ரலில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு நடத்தினர். அதேபோன்று விநாயகர் சதுர்த்தி விழாவின்போது வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு 'லஷ்கர் -இ- தொய்பா' பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக ராணுவ உளவுப்பிரிவு 22ம் தேதி உஷார் படுத்தியிருந்தது. அதில் 'லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் ஆறு பேர் இலங்கை வழியாக தமிழகத்தில் ஊடுருவியுள்ளனர். அவர்களில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டவர். எஞ்சிய ஐந்து பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.'இந்நபர்கள் தங்களை ஹிந்து போல வெளியில் காட்டிக்கொள்ள நெற்றியில் திலகமும், விபூதியும் அணிந்துள்ளனர். தற்போது கோவையில் பதுங்கி இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த இலியாஸ் அன்வராக இருக்கலாம்.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்க' என குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி 'வேளாங்கண்ணி மாதா கோவில்; நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி; கோவை சூலுார் விமானப்படை தளம்; கேரளாவிலுள்ள சபரிமலை மற்றும் முக்கிய வழிபாட்டு தளங்களே பயங்கரவாத கும்பலின் தாக்குதல் இலக்குகள்' என்ற அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன.இதைத் தொடர்ந்தே தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு சந்தேக நபர்கள் மீதான கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கோவையில் 1998ல் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்குப் பின் தற்போது தான் அதிக எண்ணிக்கையிலான போலீசார் அதி நவீன துப்பாக்கிகள் மற்றும் புல்லட் புரூப் கவச உடைகளுடன் ஷாப்பிங் மால் கோவில் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக கோவையின் பல்வேறு இடங்களில் கமாண்டோ போலீஸ் படையினரின் கொடி அணிவகுப்பு நடந்து வருகிறது.மக்கள் மத்தியில் பீதி நிலவினாலும் போலீஸ் பாதுகாப்பின் மீதான நம்பிக்கையில் அன்றாட பணிகளை தொடர்கின்றனர்.தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நேரடி மேற்பார்வையில் போலீஸ் கமிஷனர் சுமித்சரன், துணைக் கமிஷனர் பாலாஜி சரவணன் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.


இந்த அளவுக்கு உஷார் ஏன்

பல ஆண்டுகள் உளவுத் துறையில் பணியாற்றிய அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:* வெளிநாட்டில் வெளிமாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போது அதுபோன்று இங்கும் நிகழ்ந்துவிடாமல் தடுக்க அந்த சம்பவத்தின் சாராம்சத்தை அடியொற்றி உஷார் தகவலை அனைத்து மாவட்ட போலீசுக்கும் அனுப்புவது; இது வழக்கமானது பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய பயங்கரவாதிகளிடம் விசாரணை நடத்தும்போது அவர்களின் சதித்திட்டம் குறித்த தகவல்களை சேகரித்து சம்பந்தப்பட்ட மாநில மாவட்ட போலீசாரை உஷார் படுத்துவது.
* உளவாளிகள் வாயிலாக உளவுத்துறைக்கு கிடைக்கப்பெறும் ஒற்றுத் தகவல்களின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பிப்பது என உஷார் தகவல்களில் பல ரகம் உள்ளன. தற்போது தமிழகம் உஷார் படுத்தப்பட்டிருப்பது 'எம்.ஐ.' என சுருக்கமாக அழைக்கப்படும் 'ராணுவ நுண்ணறிவுப்பிரிவு' அளித்த ஒற்றுத் தகவல்களின் அடிப்படையில் என கூறப்படுகிறது. இதையொட்டியே மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஓர் அங்கமான சி.ஐ.எஸ்.எப். என்ற மத்திய தொழிலக பாதுகாப்பு படையானது தன் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையங்களை உஷார்படுத்தியிருக்கிறது.உள்ளூர் போலீசாரும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதுபோன்ற உஷார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பயங்கரவாதிகள் குழப்பமடைந்து தங்களின் திட்டத்தை கைவிடவோ அல்லது தள்ளிப்போடவோ வாய்ப்பிருக்கிறது.எனினும் பாதுகாப்பு பணியில் எவ்விதமான சமரசத்துக்கும் இடமிருக்காது. மறு உத்தரவு தொடரும் வரை பாதுகாப்பு தொடரும். சந்தேக நபர்களின் நடமாட்டத்தை பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவிப்பது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.


விஷமிகளுக்கு எச்சரிக்கை!

உளவுத் தகவல் அடிப்படையில் போலீசார் உஷார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் விஷமிகள் சிலர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி மக்களை குழப்பி வருகின்றனர்.தங்களுக்கு வேண்டாத நபர்களை பழிவாங்கும் வகையில் அவர்களின் போட்டோ வாகனங்களின் எண்களை பரப்பி வருகின்றனர்.தவறான தகவல் பரப்பும் விஷமிகளுக்கு போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.கோவை மாநகர சட்டம் - ஒழுங்கு போலீஸ் துணைக் கமிஷனர் பாலாஜி சரவணன் கூறுகையில் ''உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; மக்கள் அச்சப்பட வேண்டாம். விஷமிகள் சிலர் தவறான தகவல்களை கிளப்பி வருகின்றனர்; நம்ப வேண்டாம்'' என்றார்.


262 பேர் கைது

கோவையில் பயங்கரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவல் வந்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேலுார் மாவட்டத்தில் தமிழக - ஆந்திர மாநில எல்லையில் 24 மணி நேரம் வாகன சோதனை நடந்து வருகிறது.இந்நிலையில் 'சாமிங் ஆபரேஷன்' என்ற பெயரில் வேலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதல் நேற்று காலை 8:00 வரை 435 லாட்ஜ்கள் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்தின் அடிப்படையில் 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மூவர் சிக்கினர்

பயங்கரவாதிகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் கோவையில் நடத்திய சோதனையில் சந்தேக நபர்கள் சென்னையைச் சேர்ந்த சித்திக் கோவை உக்கடத்தைச் சேர்ந்த ஜாகிர் உள்ளிட்ட மூவர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (30+ 30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvan - Rishikesh,இந்தியா
25-ஆக-201919:43:44 IST Report Abuse
Duruvan 6 தானா, நான் 38 என்று நினைத்தேன்.
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
25-ஆக-201917:23:20 IST Report Abuse
Rajagopal எப்படி பயங்கரவாதிகள் ஊடுருவ வழி உண்டாகிறது, தேச விரோத சக்திகளை இயக்குவது யார் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்: s://www.youtube.com/watch?v=1WLkbz-g6oI&t=2s
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-ஆக-201916:08:15 IST Report Abuse
Natarajan Ramanathan தீவிரவாதத்துக்கு எதிரான பன்னிகள் ஏன் உலகம் முழுவதும் குண்டு வைக்கிறான்? சிரியாவிலும் சவூதியிலும் ஒருநாளாவது நிம்மதியாக சாப்பிட முடியுமாடா மூதேவி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X