எங்கிருந்தார் சிதம்பரம்..?

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (35)
Advertisement

புதுடில்லி: முன்னாள் நிதி அமைச்சர், சிதம்பரத்தை, ஊழல் வழக்கில், சி.பி.ஐ., கைது செய்து, விசாரணைக்கு எடுத்திருக்கிறது.





ஆனால், சிதம்பரத்தின் முன்ஜாமினை, டில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்த உடனேயே, சி.பி.ஐ., அவரை கைது செய்யவில்லை. சிதம்பரம் திடீரென மாயமானார்; எங்கே சென்றார் என, யாருக்கும் தெரியவில்லை.ஒரு நண்பர் வீட்டில், சிதம்பரம் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது, சி.பி.ஐ.க்கு தெரிந்திருந்தும், அவரை கைது செய்ய முயற்சிக்கவில்லை. 'சிதம்பரம் தலைமறைவு' என, 'மீடியா'க்களில் செய்தி வெளிவர வேண்டும் என, பா.ஜ., மேலிடம் விரும்பியதால் தான், சி.பி.ஐ., அப்படி விட்டுப் பிடித்தது.கைதாவதற்கு முன், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான அகமது படேல் வீட்டிற்கு, சிதம்பரம் சென்றார். அங்கிருந்தபடி, காங்., தலைவர் சோனியாவிடம் போனில் பேசிவிட்டு, காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதன் பிறகே, சி.பி.ஐ., அவரை கைது செய்தது. சிதம்பரத்தின் கைதை எதிர்த்து, அவருக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர், காங்., பொதுச் செயலர் பிரியங்கா.சமீபத்திய லோக்சபா தேர்தலில், தன் மகன் வெற்றிக்காக மட்டுமே பணியாற்றினார் என, சிதம்பரத்தை விமர்சித்திருந்த ராகுலும், வேறு வழியில்லாமல் அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, 'டுவிட்' செய்தார்.சிதம்பரம் கைதை எதிர்த்து, காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலும், இந்த போராட்டங்கள் பெரிய அளவில் நடக்கவில்லை.

அதே போல, எதிர்க்கட்சித் தலைவர்களும், சிதம்பரம் கைதான முறை குறித்து தான் விமர்சித்தனரே தவிர, அவர் மீதான வழக்கு குறித்து வாய் திறக்கவில்லை.பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்த பிறகும், நிதி அமைச்சகத்தில் சில சீனியர் அதிகாரிகள், சிதம்பரத்திற்கு ஆதரவாக செயல்பட்டிருக்கின்றனர். இதனால் தான், அவரை உடனடியாக கைது செய்ய முடியவில்லை. 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' நிறுவன உரிமையாளர்களுள் ஒருவரான, இந்திராணி முகர்ஜி அப்ரூவராக ஆன பிறகு, அவர் கொடுத்த தகவல்களை வைத்து தான், சிதம்பரத்தை கைது செய்ய முடிந்ததாம்.சிதம்பரம் கைதை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எதிர்த்தாலும், சிதம்பரத்தால் பாதிக்கப்பட்ட, தி.மு.க., தலைவர்கள் சிலர் மகிழ்ச்சியில் உள்ளனராம்.





இதற்கிடையே, சி.பி.ஐ., அதிகாரி ஒருவர், சிதம்பரம் மகன் கார்த்தி கைது பற்றி, ஒரு விஷயத்தை சொன்னார்.- 'நாங்கள் கார்த்தியை கைது செய்த போது, அவர் எங்களை கடுமையாக வசை பாடினார். 'லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்; நான் அமைச்சர் ஆவேன்; அப்போது உங்களை கவனித்துக் கொள்கிறேன்' என, எங்களை மிரட்டினார். ஆனால், நாங்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. இவரைப் போல, எத்தனை பேரை நாங்கள் பார்த்திருப்போம்' என்றார் அவர்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
25-ஆக-201917:46:25 IST Report Abuse
r.sundaram சிதம்பரத்தின் சொத்துக்கள் பற்றிய பட்டியல் வெளியாகி உள்ளது. படித்தால் மிகவும் பிரமிப்பாக உள்ளது. பட்டியலில் உள்ள சொத்துக்கள் சிதம்பரத்தின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் மட்டுமா அல்லது காங்கிரஸ் கட்சி, கட்சியில் பெரிய தலைவர்களது பினாமி சொத்துக்களும் இதில் அடக்கமா? ஒருவரால் உலகம் முழுவதும் இவ்வளவு சொத்துக்களை வாங்க முடியுமா, அப்படி முடிந்தால் இவர் ஆட்டை போட்ட பணம் எவ்வளவு இருக்கும்? உண்மையிலேயே பயமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-ஆக-201916:35:14 IST Report Abuse
Endrum Indian லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்????அப்போ இன்னும் அந்த மிதப்பில் தான் இருக்கிறாயா குழந்தாய் நீயும் உன்னை போன்ற முஸ்லீம் நேரு காங்கிரஸ் பசங்க எல்லாரும்???அதான் ரொம்ப துள்ளுறீங்க??அடங்குங்க உங்களால் ஒரு செங்கல்லை எடுத்து வைக்கமுடியாது உங்க கட்டிடம் கட்ட????
Rate this:
Share this comment
Cancel
thulakol - coimbatore,இந்தியா
25-ஆக-201916:28:08 IST Report Abuse
thulakol இதனை சொத்து பி சி சேர்த்திருப்பார் என்று சோனியா அம்மாவும் ரக்ஹுல் பாபாவும் நினைத்து கூட இருக்க மாட்டர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X