அரசியல் செய்தி

தமிழ்நாடு

தாய்மொழிக்கு முன்னுரிமை: வெங்கையா நாயுடு

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement

சென்னை : ''தாய் மொழியை புறக்கணிக்காமல், எவ்வளவு மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம்; அவை, நம் அறிவு மற்றும் சிந்தனைகளை வளர்க்க உதவும்,'' என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.latest tamil news
தர்மமூர்த்தி ராவ் பகதுார் கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளை சார்பில், கலவல கண்ணன் செட்டியாரின், 150வது ஆண்டு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில், நேற்று நடந்தது. அதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று, கண்ணன் செட்டியார் மற்றும் சீத்தாம்மா இணையரின், முழு உருவ சிலையை திறந்து வைத்ததுடன், அஞ்சல் தலையையும் வெளியிட்டார்.நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், அறக்கட்டளை தலைவர், வெங்கடேச பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெங்கையா நாயுடு பேசியதாவது : உலகத்தில், அன்போடும், மற்றவர்களுக்கு உதவி செய்வதோடும் இருப்பதை விட, சிறந்த மகிழ்ச்சி ஏதும் இல்லை. அதற்கு ஏற்ப வாழ்ந்தவர், கண்ணன் செட்டி. அவர், ஆயுர்வேத மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் என, பல சமூக சேவைகளை செய்துள்ளார்.சமூக நலனுக்கான, அவரது உயரிய பணிகளை தொடர்ந்து எடுத்து செல்லும் அறங்காவலர்களுக்கு, என் பாராட்டுக்கள். அனைவருக்கும் தரமான கல்வி அளிப்பதன் வாயிலாக, நாட்டை சமத்துவமான, துடிப்புமிக்க அறிவு சமூகமாக மாற்றும் கல்வி முறையை உள்ளடக்கிய, புதிய கல்வி கொள்கை, இறுதி செய்யப்பட்டு வருகிறது.


latest tamil news
மொழி என்பது, நமது சிந்தனைகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சாதனம். இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழியும் மதிப்புமிக்கது. ஒவ்வொருவரும், தாய்மொழிக்கு முன்னுரிமை அளித்து, நன்கு கற்க வேண்டும்.தாய் மொழியை புறக்கணிக்காமல், எவ்வளவு மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம். அவை, நம் அறிவை வளர்க்கவும், சிந்தனைகளை வளர்க்கவும் உதவும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kathir -  ( Posted via: Dinamalar Android App )
26-ஆக-201902:16:00 IST Report Abuse
kathir naidu is great
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-ஆக-201916:30:35 IST Report Abuse
Endrum Indian என்னய்யா இது அநியாயம் இப்படி கோக்கு மாக்காக பதிலளித்தால் கருணாநிதி/சுடலை - தெலுங்கு தாய் மொழி, ஜெயலலிதா, சொரியான் - கன்னடம் எம்ஜிஆர் -மலையாளம் அவங்க தவிச்சுபோயிருவாங்க இல்லே டாஸ்மாக்கினாட்டில் இருந்து கொண்டு
Rate this:
Cancel
we -  ( Posted via: Dinamalar Android App )
25-ஆக-201912:25:03 IST Report Abuse
we தாய்மீது பக்தீ, ரொம்பசரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X