சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உயிரோடு இருப்பவருக்கு டெத் ரிப்போர்ட்

Added : ஆக 25, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
டெத் ரிப்போர்ட், மருத்துவமனை, கோவை, மதுபோதை, டிஸ்சார்ஜ்

கோவை : உயிரோடு இருப்பவரை, இறந்து விட்டதாக, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள், போலீசாருக்கு, 'ரிப்போர்ட்' அளித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் சாலையைச் சேர்ந்த யூசுப் குடிப்பழக்கம் கொண்டவர். மதுபோதையில் மனைவிக்கு பதில் மாமியாரை கத்தியால் குத்திவிட்டார். சிகிச்சை பெற்ற ஆதிரா பேகம் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்கள் ஆதிரா பேகம், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார் என்பதற்கு பதிலாக, 'டெத்' என எழுதி, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன், அசோகன் கூறியதாவது:ஆதிரா பேகம், யாரிடமும் சொல்லாமல் வெளியேறி விட்டார். அதே நேரத்தில், மற்றொரு பெண் ஒருவர், இறந்து விட்டார். இறந்த பெண் பெயருக்கு பதிலாக, ஆதிரா பேகம் இறந்து விட்டதாக, தவறாக எழுதி விட்டனர். ஆனால், தவறை உணர்ந்து, சிறிது நேரத்தில் திருத்தம் செய்து கொடுத்தனர். போலீசார், அதை கவனிக்காமல் விட்டதால், தவறு நடந்து விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
25-ஆக-201919:07:13 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj இதேபோல மாத்திரை மருந்துகளை தவறாக எழுதி கொடுத்து ஊசி டானிக் போன்றவைகளை தவறாக செலுத்தி உயிர்ப்பலியாயிருப்பின் என்னவாகும் தவறாக எழுதி கொடுத்தோருக்கு உரிய அபராதமாவது செலுத்தவைத்தால்தான் இதுபோன்ற தவறுகள் நடக்காது இதுவும் ஒருவகை அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு போல கண்டுகொள்ளாமையைத்தான் காணமுடிகிறது
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-ஆக-201917:17:36 IST Report Abuse
Endrum Indian இதில் என்ன அதிர்ச்சி ? மேலே போட்டோவில் பார்த்தாலே தெரியுதே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்று??இங்கே இதெல்லாம் சகஜம் இதுவும் நம்ம ஜல்லடை சட்டம் அநீதித்துறை போல பணம் கொடு, என்ன நீ சொல்கிறாயோ அதை நாங்கள் உனக்கு செர்டிபிகேட்டாக கொடுக்கின்றோம், ஆனா என்ன சில்லறை கொஞ்சம் அதிகம் பெயர வேண்டும் அவ்வளவு தான்?????
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-ஆக-201913:47:56 IST Report Abuse
Lion Drsekar செய்தி ஒன்றும் அதிர்ச்சி அல்ல, ஆனால் நடவடிக்கையை எடுக்காமல் இருக்கிறார்கள் பாருங்கள் அங்குதான் ஜனநாயகம், ( ஜாதிக்கும் மதத்துக்கும் பயந்து நடவடிக்கை எடுக்க நாடுகிறார்கள்), வாழ்க ஜனநாயகம் வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X