காஷ்மீரில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement

அபுதாபி : ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் வெளிநாடு வாழ் இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நிலையான அரசியல் தன்மை திட்டமிட்ட செயல்பாடுகள் ஆகியவை இந்தியாவில் முதலீடு செய்வதற்கு மிகச் சாதகமான சூழல்களாக உள்ளன.latest tamil newsஅரசின் திட்டங்கள் அனைத்துமே பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பு உள்நாட்டிலேயே பொருட்கள் தயாரிப்பது ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சாதகமாக உள்ள சூழலை தொழில் அதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஜம்மு - காஷ்மீரில் தற்போது நல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தொழில் அதிபர்கள் அங்கு அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். பல்வேறு காரணங்களால் அந்த மாநிலம் முதலீடு விஷயத்தில் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்தது.


latest tamil newsஇப்போது அந்த தடை நீங்கி விட்டது. தொழில் அதிபர்கள் தாராளமாக முதலீடு செய்ய வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் பல முக்கிய திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் காஷ்மீர் முக்கிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜம்மு - காஷ்மீரும் லடாக்கும் உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. இதுவரை நாட்டின் மற்ற மாநிலங்களில் இருந்து ஜம்மு - காஷ்மீர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால் அங்குள்ள இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர். இதன் காரணமாகவே ஜம்மு - காஷ்மீரில் சில மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டன. இது எங்கள் நாட்டின் உள் விவகாரம் சம்பந்தப்பட்டது.


latest tamil newsமுழுமையான ஜனநாயகம் வெளிப்படையான அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவின் இந்த செயல்பாட்டை புரிந்து ஆதரவு அளித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பல ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டது. பயங்கரவாதமும் பழமைவாதமும் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன. இங்கு பணியாற்றும் பல லட்சம் இந்தியர்கள் தங்கள் இரண்டாவது தாய் வீடாக ஐக்கிய அரபு எமிரேட்சை தான் கருதுகின்றனர். சமூக நல்லிணக்கத்துக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
26-ஆக-201912:41:55 IST Report Abuse
Kumar periyaar எப்பொழுது தான் நமது நாடு வெளிநாட்டில் தொழில் தொடங்க மத்த நாட்டின் தலைவர்கள் அழைப்பார்களோ. வெட்கம் இல்லாமல் இவ்வளவு பசுமையான பெரிய நாடு நாங்கள், பாலைவனம் கொண்ட சின்ன நாட்டின் தலைவர்களை அழைக்கிறோம்
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
25-ஆக-201917:58:48 IST Report Abuse
Viswam மாஸ்டர் பிளான் பாக்கிகளை அங்கேவந்து நோண்டமுடியாதமாதிரி செய்யும்படியான யோசனை விரலை விட்டால் ...... நசுக்கி விடுவார்கள் அரபிகள்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-ஆக-201916:26:11 IST Report Abuse
Endrum Indian ஆரம்பிச்சுட்டாராய்யா ஆரம்பிச்சுட்டார்???பாவம் முஸ்லீம் பாகிஸ்தான், காஷ்மீரில் இருக்கும் முஸ்லீம் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் இதை மறுக்கவும் முடியாது ஒத்துக்கொள்ளவும் முடியாது, முஸ்லீம் நாடுகள் வந்தது அங்கு தொழில் ஆரம்பித்தால் அந்த தொழிலில் கை வைத்தால் தலையை வெட்டி விடும் அந்த அரசாங்கம் அவர்கள் ஷரியா முறைப்படி??பாகிஸ்தானுக்கும் அதே நேரத்தில் அடி விழும்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X