பா.ஜ.,வில் ஜெய்ராம் ரமேஷ்?

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (45)
Share
Advertisement
புதுடில்லி: காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜெய்ராம் ரமேஷ்; முன்னாள் அமைச்சர். கர்நாடகாவைச் சேர்ந்த இவர், தமிழ் நன்றாக பேசக் கூடியவர். இப்போது, ராஜ்யசபா, எம்.பி.,யாக உள்ளார். 65 வயதாகும் ஜெய்ராம், ஒரு காலத்தில், சோனியாவிற்கும், ராகுலுக்கும் மேடைப் பேச்சுகளை எழுதித் தந்தவர். மேலிடத்தோடு அவ்வளவு நெருக்கமாக இருந்த இவரை, இப்போது ஓரங்கட்டி விட்டனர்.சமீபத்தில்,

புதுடில்லி: காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜெய்ராம் ரமேஷ்; முன்னாள் அமைச்சர். கர்நாடகாவைச் சேர்ந்த இவர், தமிழ் நன்றாக பேசக் கூடியவர். இப்போது, ராஜ்யசபா, எம்.பி.,யாக உள்ளார். 65 வயதாகும் ஜெய்ராம், ஒரு காலத்தில், சோனியாவிற்கும், ராகுலுக்கும் மேடைப் பேச்சுகளை எழுதித் தந்தவர். மேலிடத்தோடு அவ்வளவு நெருக்கமாக இருந்த இவரை, இப்போது ஓரங்கட்டி விட்டனர்.latest tamil newsசமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியது, காங்கிரசுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. 'மோடி பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்; கிராமத்து பெண்களுக்கு, சமையல் எரிவாயு அளிக்கும் திட்டம் உட்பட, பல நல்ல திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். 'அதனால், அவரை எப்போதும் விமர்சித்துக் கொண்டிருப்பதால், எந்த பலனும் ஏற்படப் போவதில்லை' என, பேசியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

சமீப காலமாக, காங்கிரஸ் உட்பட, பல எதிர்க்கட்சிகளிலிருந்து, தலைவர்கள் பலர், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். ஜெய்ராமும் அப்படி இணையப் போகிறாரா என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.ஜெய்ராம், இரு முறை பிரதமர் மோடியை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த சந்திப்பில், பிரதமரின் பல திட்டங்களை, ஜெய்ராம் மனம் திறந்து பாராட்டினாராம். இது, பா.ஜ., வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil newsஆனால், ஜெய்ராம் தரப்பில், இதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. 'எதையும் மனம் திறந்து பேசக் கூடியவர் ஜெய்ராம்; அவர், மோடியை பாராட்டியதை வைத்து, பா.ஜ.,வில் சேர்ந்து விடுவார் என்பது தவறு' என்கின்றனர், அவருக்கு நெருக்கமானவர்கள்.ஜெய்ராமை தொடர்ந்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், அபிஷேக் மனு சிங்வியும், 'மோடியை தனி நபர் விமர்சனம் செய்வதால், காங்கிரசுக்கு எந்த நன்மையும் இல்லை' என, சொல்லியிருக்கிறார்.

இதனால், காங்கிரஸ் தலைமை நொந்து போயுள்ளது. இப்படி ஆளாளுக்கு ஒன்று பேசினால் தொண்டர்கள் குழம்பிவிடுவர் என, கட்சி கவலைப்படுகிறது. 'காங்கிரஸ், மோடியின் திட்டங்களைத் தான் குறை கூறுகிறது; தனிப்பட்ட நபரை விமர்சிக்கவில்லை' எனக்கூறி, இந்த இருவரையும், கட்சி தலைமை எச்சரித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
26-ஆக-201900:09:22 IST Report Abuse
Subbanarasu Divakaran ஜெய் ராம் ரமேஷ் இந்த தந்தை பேராசிரியர் சி.கே.ரமேஷ் ஸ்ரீ வைஷ்ணவர் அய்யங்கார் கர்நாடகாவில் இருந்தாலும் தமிழ் நன்றாக பேசுவார். சி.கே.ரமேஷ் இப்போது காலமாகி விட்டார். அவர் என்னுடைய நண்பர்.
Rate this:
26-ஆக-201910:10:16 IST Report Abuse
ஆரூர் ரங்கட்சிமாறி ஜெயராம் பதவிக்கு அலையவேண்டாம். ஏற்கனவே உள்ள நான்கு தமிழ் பாஜக எம்பிக்களும் (அதில் இரண்டு மத்திய மந்திரிகளும்) ஒரே சாதின்னு புகார். பொறாமை. இவருக்கும் பதவி கொடுத்து பெரிதாக்கவிடக்கூடாது என்பதை  அமித்ஷா  நன்கறிவார்....
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஆக-201920:05:42 IST Report Abuse
Malick Raja இவருக்கெல்லாம் எப்போதும் ஆளும் கட்சியில் இருக்கவேண்டும் ..இனி காங்கிரஸ் கட்சியில் ஒருக்காலும் வரமுடியாது ..
Rate this:
Jayvee - chennai,இந்தியா
26-ஆக-201913:06:07 IST Report Abuse
Jayveeதம்பி, ராவுல் வின்சி கூட தனக்கு கட்சி தலைமை பதவி வேண்டாம் என்று கூறியது இதற்காகத்தான்....
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
25-ஆக-201918:45:47 IST Report Abuse
Rameeparithi இப்படியெல்லாம் பேசினால் மணிமேகலை & கோவிற்கு பொங்கிடுமே… பசுவும் கன்றும் மோடிஜியை எதிர்ப்பது தான் முதல் வேலை, நாட்டைப் பற்றிய கவலையெல்லாம் துளியும் இல்லை
Rate this:
Ganesh - Chennai,இந்தியா
25-ஆக-201923:53:04 IST Report Abuse
Ganeshமுதலில் மோடிஜி யை கவலைப்பட சொல்லுங்க இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் இருக்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X