முதல் முறையாக "ரூபே" கார்டை பயன்படுத்திய மோடி

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (10)
Advertisement

மனாமா : பஹ்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள கோயிலில் முதல் முறையாக ரூபே கார்டினை பயன்படுத்தி பிரசாதம் வாங்கி உள்ளார்.





3 நாடுகள் பயணமாக பிரதமர் மோடி பஹ்ரைன் சென்றுள்ளார். அங்குள்ள மனாமா பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்ற மோடி, ரூபே (RuPay) கார்டினை பயன்படுத்தி, பிரசாதம் வாங்கி உள்ளார். இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை வலியுறுத்தி வரும் மோடி, பஹ்ரைனில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலம் கோயிலில் உள்ள இந்திய ஸ்வீட் கடையில் பிரசாதம் வாங்கி உள்ளார். பூடான், சிங்கப்பூருக்கு பிறகு ரூபே கார்டினை அறிமுகம் செய்த நாடு பஹ்ரைன் ஆகும்.




பஹ்ரைனில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீநாத்ஜி கோயிலில் பிரதமர் மோடி இன்று (ஆக.,25) வழிபாடு செய்ய உள்ளார். அதன் பிறகு தனது பஹ்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு, ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டில் உள்ள பியாரிட்ஸ் நகருக்கு செல்ல உள்ளார். பியாரிட்ஸ் நகரில் ஆக.,25 மற்றும் 26 ஆகிய நாட்களில் ஜி 7 மாநாடு நடக்க உள்ளார். இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், காலநிலை, டிஜிட்டல் தகவல் பரிமாற்றம், கடல்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஆக-201900:32:48 IST Report Abuse
ஆப்பு ஃப்ரான்சில் ரூபே கார்டைப் பயன்படுத்தச் சொல்லுங்கள்...செல்லுதான்னு பாக்கலாம். அங்கேயும் தானே 36000 கோடிக்கு ரஃபல் வியாபாரம் பண்ணியிருக்கோம்?
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக-201917:22:44 IST Report Abuse
Janarthanan இந்தியாவில் உருவான ரூபே (RuPay) எல்லா நாடுகளிலும் பயன் படுத்த ப்ரோமோ செய்வது அவரின் இந்திய நாட்டு மீது உள்ள அக்கறையை காட்டுகிறது
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
25-ஆக-201915:17:50 IST Report Abuse
bal இந்தியாவில் நிறைய ஊர்களில் ரூபே கார்டுகளை வாங்கமாட்டேன் என்கிறார்கள்... நல்ல பெரிய கடையாக இருக்கும்...இருந்தும் ஒரு கார்டும் வாங்குவதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X