தமிழ்நாடு

பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை: மாவட்டத்தில் 2வது நாளாக தீவிர சோதனை

Added : ஆக 25, 2019
Share
Advertisement
ஈரோடு: பயங்கரவாதிகள் ஊடுருவல் தகவலையடுத்து, ஈரோடு மாவட்டத்தில், இரண்டாவது நாளாக, நேற்றும் தீவிர சோதனை நடந்தது.விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க, பாகிஸ்தானி உள்பட ஆறு தீவிரவாதிகள், கோவையில் ஊடுருவியுள்ளதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 13 செக்போஸ்டுகளிலும்,

ஈரோடு: பயங்கரவாதிகள் ஊடுருவல் தகவலையடுத்து, ஈரோடு மாவட்டத்தில், இரண்டாவது நாளாக, நேற்றும் தீவிர சோதனை நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க, பாகிஸ்தானி உள்பட ஆறு தீவிரவாதிகள், கோவையில் ஊடுருவியுள்ளதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 13 செக்போஸ்டுகளிலும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேடுதல், கண்காணிப்பு பணி, இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பழங்குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணித்து கைது செய்கிறோம். லாட்ஜ்கள், மாத தங்கும் விடுதிகளில் நள்ளிரவில் திடீர் ரெய்டு நடத்துகிறோம். தொடர்ந்து ரெய்டு, கண்காணிப்பில் ஈடுபடுகிறோம். மறு உத்தரவு வரும் வரை தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில்வே ஸ்டேஷன் 'வெறிச்': தீவிரவாதிகள் ஊடுருவியதாக, தமிழகத்துக்கு 'ரெட் அலர்ட்' விடப்பட்ட நிலையில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், நேற்று போலீசார் யாருமின்றி காணப்பட்டது. பயணிகள், மக்கள் எவ்வித தயக்கமும் இன்றி ரயில்வே ஸ்டேஷன் பகுதிக்குள் சென்று வந்தனர்.

எல்லையில் தீவிரம்: கோவை - ஈரோடு மாவட்ட எல்லையான புன்செய்புளியம்பட்டி, நால்ரோடு சோதனை சாவடியில், துப்பாக்கி ஏந்திய போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடக மாநில அரசு பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X