பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்த தலைமுறைக்கு இயற்கையே சொத்து: அழியாமல் காக்கிறது 'வனம் இந்தியா'

Added : ஆக 25, 2019
Advertisement
அடுத்த தலைமுறைக்கு இயற்கையே சொத்து: அழியாமல் காக்கிறது 'வனம் இந்தியா'

இயற்கையை நேசிப்பது மட்டுமல்ல, அதைப் பாதுகாப்பதும் அவசியம்.அந்த வரிசையில், திருப்பூர் மாவட்டத்தில், மழை மறைவு பகுதியான பல்லடத்தை மாதிரியாகத் தேர்வு செய்து, அங்கு, பசுமை மற்றும் நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க, 'வனம் இந்தியா பவுண்டேஷன்' உருவாக்கப்பட்டது.

தற்போது, நான்காவது ஆண்டாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்த அமைப்பில், 280 அறங்காவலர்கள், 300 தன்னார்வலர்கள், 20 முழுநேர களப்பணியாளர்கள் உள்ளனர்.பசுமை, சுற்றுச்சூழல், இயற்கை குறித்து விழிப்புணர்வு அளித்தல்; மரம் நடுதல் மற்றும் பராமரித்தல்; நீர் மேலாண்மை; கழிவுகளை வளமாக்குதல்; இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல் என்ற ஐந்து செயல் திட்டங்களுக்கு, துறைகள் ஒதுக்கி துணைத்தலைவர்கள், இயக்குனர்கள் அமைத்தும் செயல்பட்டு வருகிறது.

அதில், பசுமை, சுற்றுச்சூழல், இயற்கை குறித்து விழிப்புணர்வு அளித்தல் திட்டத்தில், ஆண்டுக்கு ஒரு முறை, உலக மற்றும் இந்திய அளவில், பசுமை கொள்கைகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாய முறைகளை கற்கவும், விழிப்புணர்வு பெறவும் பசுமை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. 'வான்மழை' தலைப்பின் கீழ், மாதந்தோறும் நடத்தப்படும் கருத்தரங்கம், கொள்கை சார்ந்த விழிப்புணர்வுக்கு வழிவகை செய்யப்படுகிறது.அதேபோல், மரம் நடுதல் மற்றும் பராமரித்தல் திட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. சிறந்த பராமரிப்பால், 45 ஆயிரம் மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இதற்கென 'மரம் ஓர் வரம்' என்ற பெயரில், 1500 ரூபாய் செலவிடப்படுகிறது. அதேபோல், நீர் மேலாண்மை திட்டத்தில், 'வானமுது' என்ற தொழில்நுட்பத்தில், வீடுகள், பள்ளிகள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு பயன்பாட்டு முறையை அளித்து வருகிறது.

கழிவுகளை வளமாக்குதல் திட்டத்தில், பள்ளி மாணவர்களின் உறுதுணையுடன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மறு சுழற்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேசமயம், மக்கும் திடக்கழிவுகளையும், மின்சாதன கழிவுகளையும் பிரித்து உரமாக மாற்றும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தலில், நஞ்சில்லா தானியங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கும் பொருட்டு கருத்தரங்கம், களப்பயணம் மேற்கொள்ளுதல், விளை பொருட்களை மதிப்பு கூட்ட ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் சுந்தர்ராஜன் கூறுகையில், ''இயற்கையை பாதுகாப்பது கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதைப் போல, இயற்கையையும் பாதுகாத்து சேர்த்து வைக்க வேண்டும். இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X