விண்வெளியில் முதல் குற்றம்: நாசா விசாரணை| Nasa astronaut committed crime in space, claims divorcing spouse: Report | Dinamalar

விண்வெளியில் முதல் குற்றம்: நாசா விசாரணை

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (7)
Share
விண்வெளி, முதல் குற்றம், நாசா விசாரணை

வாஷிங்டன்: தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது புகார் எழுந்துள்ளது. விண்ணில் நடந்ததாக கூறப்படும் இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா விசாரணை நடத்தி வருகிறது.

ஒரு பாலின ஜோடியான மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2018 ல் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில், சம்மர் வொர்டன், அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திடம் அளித்த புகாரில், மெக்லைன், விண்வெளியில் இருந்து, வங்கி கணக்கை இயக்கியதாக புகார் அளித்துள்ளார்.
தற்போது பூமிக்கு திரும்பியுள்ள மெக்லைன், விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை இயக்கியதை ஒப்பு கொண்டதுடன், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும், சம்மர் வொர்டன் மற்றும் தனது மகனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என பரிசோதனை மட்டும் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக நாசா அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அந்தந்த நாடுகளின் சட்டம்
latest tamil news
விண்வெளியில், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள்,அங்கு தங்கியிருந்து விண்வெளி ஆய்வில் ஈடுபடுகின்றனர். வீரர்கள், எந்த நாட்டை சேர்ந்தவர்களோ, அந்த நாடுகளின் சட்டம் அவர்களுக்கு பொருந்தும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X