பிளாஸ்டிக் ஒழிக்க மக்கள் இயக்கம்: மோடி

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (15)
Advertisement
PM Modi,  mass movement,plastic, Mann Ki Baat, பிளாஸ்டிக், பிரதமர் மோடி,

புதுடில்லி: பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க மஹாத்மா காந்தி பிறந்த நாளில் பெரிய மக்கள் இயக்கத்தை துவக்குவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

வரும் அக்., 2ம் தேதி மஹாத்மா காந்தி பிறந்த நாள் அன்று, பெரிய திருவிழாவிற்கு இந்தியா தயாராகி வருகிறது. இதனை உலகமே எதிர்நோக்குகிறது. சேவை செய்வது, மஹாத்மா காந்தியின் வாழ்க்கையில், பிரிக்க முடியாததாக இருந்தது. மஹாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில், தேசத்தை திறந்த வெளி இல்லாத நாடாக மாற்றுவோம். மேலும், அன்று, பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க பெரிய மக்கள் இயக்கத்தை துவங்குவோம் இந்த ஆண்டு மஹாத்மா பிறந்த நாளை, நமது தாய் இந்தியாவை பிளாஸ்டிக்கிலிருந்து விடுவித்து கொண்டாடுவோம்.

வனப்பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், நான் ஹிந்தி பேசியதை, பியர் கிரில்ஸ் எப்படி புரிந்து கொண்டார் என ஏராளமானோர் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் இந்த நிகழ்ச்சி எடிட் செய்யப்பட்டதா அல்லது பல முறை காட்சிபடுத்தப்பட்டதா எனவும் கேள்வி எழுப்புகின்றனர். எனக்கும், அவருக்கும் இடையில், தொழில்நுட்பம் பெரிய பாலமாக செயல்பட்டது. எனது ஹிந்தி மொழியை மொழிபெயர்க்கும் கருவியை அவர் அணிந்து கொண்டார்.






பருவ நிலை மாற்றத்திற்கு எதிராகவும், இந்தியாவில் தூய்மையான சுற்றச்சூழலுக்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அறிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றனர் ஆக.,29 தேசிய விளையாட்டு தினத்தன்று, பிட் இந்தியா இயக்கத்தை நாம் துவக்குவோம். அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதை பார்க்க விரும்புகிறேன்.






கடவுள் கிருஷ்ணரின் வாழ்க்கையில் இருந்து, அனைவரும், தற்போதைய பிரச்னைகளுக்கான தீர்வை காண வேண்டும். கடவுள் கிருஷ்ணர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்தாலும், பிரச்னைகளுக்கு அவர் வழங்கிய தீர்வுகள், இன்றும் பொருத்தமாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-ஆக-201920:53:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஸ்வாச் பாரத் கூவல் பழசாயிடிச்சி.. ஒரு அடிப்படை கழிவுநீர் சுத்திகரிப்பு மேலாண்மை பற்றி அறிவின்றி, கவலைப்படாமல் கக்கூஸ் மட்டும் கட்டி காசு பாத்தாச்சி. இப்போ திடகழிவு மேலாண்மை பற்றியோ, பிளாஸ்டிக் மறுசுழற்சி பற்றியோ ஒரு திட்டமும் இல்லாமல் புது கூவல்.
Rate this:
Share this comment
Cancel
25-ஆக-201919:18:24 IST Report Abuse
ஆப்பு பிளாஸ்டிக் இல்லேண்ணா இவரோட தினசரி வாழ்க்கை ஸ்தம்பிச்சுரும். இவர் மட்டுமல்ல நாம் எல்லோரும் ப்ளாஸ்டிக் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. பிளாஸ்ட்டிக்கை மறு சுழற்சி செய்தல் பற்றி பேசுனா ஓக்கே. இவரு பையில் இருக்கும் பிளாஸ்டிக் பேனாவை தூக்கி எறிஞ்சுட்டு ஒரு நாள் இருக்க முடியுமா? சாட்சிக்கு காந்தி பொறந்த நாளைக் கூப்புடறாரு.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
25-ஆக-201917:54:25 IST Report Abuse
J.Isaac இளைஞர் சமுதாயம் காக்கப்படவேண்டும் என்றால் ... தடை செய்யப்படவேண்டும்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27-ஆக-201905:39:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இளைஞர் சமுதாயம் ரப்பரை யூஸ் பண்ணுது. தடை செய்தால் பெரிய பிரச்சினை குழம்பும் மக்களே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X