பொது செய்தி

தமிழ்நாடு

செப்., 24, 25, 26ல் கறவை மாடுகளுடன் போராட்டம்: பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

Added : ஆக 25, 2019
Advertisement

நாமக்கல்: ''செப்., 24, 25, 26ல், தமிழகம் முழுவதும், கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்,'' என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க பொது செயலாளர் முகமது அலி கூறினார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். பின்னர், பொதுச் செயலாளர் முகமது அலி நிருபர்களிடம் கூறியதவது: பால் விலை உயர்வு, பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திருக்கிறது. 2014க்கு பின், பால் கொள்முதல் விலை உயர்வை, தமிழக அரசு அறிவிக்கவில்லை. ஆனால், கால்நடை தீவனங்களின் விலை உயர்வு, 50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. பசும்பால், லிட்டருக்கு, 28ல் இருந்து, 40 ரூபாய், எருமை பாலுக்கு, 35ல் இருந்து, 50 ரூபாய் என, கொள்முதல் விலையை உயர்த்த போராடி வருகிறோம். தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, பால் கொள்முதல் விலை உயர்வை அறிவிக்க வேண்டும். ஆவின் நிர்வாகம், ஆரம்ப சங்கங்களுக்கு, 200 கோடி ரூபாய் வரை, 50 நாட்களுக்கு, பால் பணம் பாக்கி வைத்துள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். பால் கூட்டுறவு அமைப்புகளை பாதுகாப்பதற்கு, தமிழக அரசு, 50 சதவீத மானிய விலையில், கால்நடை தீவனம் வழங்க வேண்டும். ஆவின் பால் விற்பனை முகவர்களுக்கான கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும். தனியார் நிர்வாகங்கள், பால் கலப்படம் செய்வதை, கடுமையான சட்டங்கள் மூலம் தடுக்க வேண்டும். தனியார் கொள்முதல் செய்கிற பாலுக்கு, அரசு அறிவித்த கொள்முதல் விலையை விட, குறைவாக கொடுப்பதை அரசு அனுமதிக்கக்கூடாது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 24, 25, 26ல், தமிழகம் முழுவதும், மாவட்டங்களில் உள்ள ஆவின் அலுவலகம், அரசு அலுவலகம், ஆரம்ப சங்கங்கள் ஆகியவற்றின் முன், கறவை மாடுகளுடன், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X