பொது செய்தி

தமிழ்நாடு

மணல் கொள்ளை என எம்.பி., குற்றச்சாட்டு; இல்லை என அமைச்சர் தங்கமணி பதிலடி

Added : ஆக 25, 2019
Advertisement

நாமக்கல்: 'மணல் கொள்ளை நடக்கிறது' என, எம்.பி., சின்ராஜ் குற்றச்சாட்டியதற்கு, 'நாமக்கல் மாவட்டத்தில், சட்டவிரோத செயல் எதுவும் இல்லை' என, அமைச்சர் தங்கமணி பதிலடி கொடுத்தார்.
நாமக்கல், அரசு சட்டக்கல்லூரி துவக்க விழாவில், கொ.ம.தே.க., - எம்.பி., சின்ராஜ் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், காவிரி கரையோர பகுதிகளில் அனுமதி இல்லாமல், இரவு, பகல் என்று பாராமல், மணல் கொள்ளை நடக்கிறது. வெங்கரையில் நிறுத்திவிட்டனர். நன்செய் இடையாரு மற்றும் காவிரியில், மணல் எடுப்பதற்கு அனுமதி இல்லாத இடத்தில், மணல் எடுப்பதற்கு கண்டிப்பாக தடை போட்டால் மட்டும்தான், வரும் காலங்களில், விவசாயத்துக்கும், குடிநீருக்கும், தண்ணீர் சிரமமின்றி கிடைக்கும். கலெக்டருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அரசு கண்டிப்பாக தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி பேசியதாவது: இன்றைய தினம் பேசிய, எம்.பி., நிறைகள் இருந்தால் பாராட்டலாம். குறைகள் இருந்தால் சொல்லலாம் என, கலெக்டரிடம் நேற்று மனுவை கொடுத்துவிட்டு, இன்று கூட்டத்தில் வந்து சொல்லியிருக்கிறார். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, சட்ட விரோத செயல் எதுவுமே இல்லை. ஒன்று, இரண்டு நடந்தால், போலீசாரும், கலெக்டரும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். நன்செய் இடையாரை பற்றி சொன்னார். இங்கு பத்திரிகை நண்பர்கள் இருக்கின்றனர், சென்று பார்க்கட்டும். அவர் கூறியதைபோல் இருந்தால், நான் ஏற்றுக் கொள்கிறேன். அப்படி இல்லை என்றால், அவர் சொன்னதற்கு பதில் சொல்ல வேண்டும். ஒரு மாவட்டத்துக்கு, இத்தனை திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம். அவற்றை பாராட்டி, அதற்கு பின் ஒரு கரும்புள்ளி வைப்பதுபோல், ஒன்றை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். மணல் மட்டும் அல்ல, மாவட்டத்தில், எவ்வித சட்டவிரோத செயல்களும் இல்லை என்பதை அறுதியிட்டு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X